ரோஜாக்களின் முடிவு!

Jun 01, 2026,04:25 PM IST

- க. யாஸ்மின் சிராஜூதீன்


ரோஜா மலர்களின் மாநாடு நடக்குதாம் ...

தொடக்க உரையுடன் தொடங்குதாம் 

கூடி  என்ன பேசுதாம்....

சிரித்து  பேசி  மகிழுதாம்...

சிங்காரமாய் நடந்து பாக்குதாம் 

பாட்டெல்லாம்  பாடுதாம்...

தோட்டம் எல்லாம்  வாசம் வீசுதாம் 

கதிரவனை வணங்கி மகிழுதாம் 

விவசாயிக்கு நன்றி செலுத்துதாம் 

மலர்மாலையாகி  பிறருக்கு உதவ 

முடிவு செய்ததாம்...

தன்னை வளர்த்த   விவசாயிக்கு தானும் 

உதவ  நினைத்ததாம்...

நிறைய பூக்கள் பூத்து குலுங்க ஆணையிட்டதாம்...




மலர்கள் பூத்து சிரித்தன...

விவசாயி முகம்  மலரவே...

உதவியின்  சிறப்பை   நாமும் 

உணரவே.....

பிறருக்கு  உதவி  செய்து மகிழ்ந்திடுவோம்...

சிறந்த வாழ்கை  வாழ்ந்திடுவோம்....!!!

மலர்கள்  மெல்ல  பேசுதாம்..

மகிழ்ச்சிக் கடலில் நீந்துதாம்..

வாழ்க்கையின் பயனை அடைந்ததாய்....

நன்றி உரை  சொன்னதாம்...!!!

இனிதே கூட்டம்  முடிந்ததாம்....!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!

news

விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!

news

தேனிசை வானில் கலந்தது!

news

ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!

news

இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!

news

களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?

news

காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!

news

தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!

news

கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!

அதிகம் பார்க்கும் செய்திகள்