ஜி20 மாநாடு.. டெல்லி ரெடி.. தலைவர்கள் குவிகிறார்கள்.. பாதுகாப்பு ஹை அலர்ட்!

Sep 08, 2023,09:33 AM IST
டெல்லி: பலத்த பாதுகாப்புக் கோட்டையாக மாற்றப்பட்டுள்ள டெல்லியில் ஜி20 மாநாடு நாளை தொடங்குகிறது. இதையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் வந்து குவிய ஆரம்பித்துள்ளனர்.

வளர்ச்சி அடைந்த 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி20 அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது. இதையடுத்து நாளை இந்தியா தலைமையில் டெல்லியில் ஜி20 அமைப்பின் மாநாடு நடைபெறவுள்ளது. 2 நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறும்.



இதையொட்டி தலைநகர் டெல்லியில் மிகப் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று காலை 5 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 12 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஆம்புலன்ஸ்கள், மருந்து வாகனங்கள், அத்தியாவசியச் சேவைப் பிரிவினரின் வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள், சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்குள் மட்டுமே செலுத்த அனுமதிக்கப்படும். இந்தியா கேட், கர்தவ்யா பாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாக்கிங், சைக்கிளிங், பிக்னிக் செல்வது ஆகியவற்றைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட  ஒரு லட்சம் போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் டெல்லி முழுவதும் பாதுகாப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். தெருத் தெருவாக கண்காணிப்பும் மேற்கொள்ளப்படவுள்ளது.  போர் விமானங்களும் கூட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஜாமர் கருவிகள், மோப்ப நாய்கள், ஏஐ அடிப்படையிலான கேமராக்கள் சகிதம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று டெல்லி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று அவர் முக்கியப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்