60களில் வெளிவந்த .. நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் உருவாகும்.. கங்காதேவி.. ஹாரர் படமாம்!

Mar 21, 2024,02:36 PM IST

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை பட பாணியில் மறு ஜென்ம கதையாக கங்கா தேவி திரைப்படம் உருவாக உள்ளதாம். ஹாரர், திரில்லர், காமெடி, என எல்லா அம்சங்களும் கலந்த இப்படம் தமிழ் புத்தாண்டு பிறந்ததும் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.


நடிகர் ராகவா லாரன்ஸின் சீடரும், சண்டி முனி படத்தை இயக்கியவருமான மில்கா செல்வா கங்காதேவி படத்தை இயக்குகிறார். குமரன் சினிமா சார்பில், கே. என் பூமிநாதன் இப்படத்தை தயாரிக்கிறார்.சுரேஷ் ஒளிப்பதிவு செய்ய,  வித்தியா சரண் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படம் ஹாரர், கிரைம், கலந்த திரில்லர் கதையாக உருவாக உள்ளதாம். மேலும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் மறு ஜென்ம கதையை போல இப்படத்தின் கதையும் அமைந்துள்ளதாம்.




கதாநாயகியை மையப்படுத்தி உருவாக இருக்கும் இப்படத்தில் நாயகி மஹானா நடிக்கிறார். இவர் ஏற்கனவே கரு மேகங்கள் கலைகின்றன, வரலாம் வா உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவர். அட்டு படத்தில் நடித்த நடிகர் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார்.


நளினி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள்.  ஆர்த்தி மற்றும் கணேஷ்கர் இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் முதல் முறையாக கணவன் மனைவியாக இணைந்து நடிக்கின்றனர். இவர்களுடன் சூப்பர் சுப்புராயன், மொட்ட ராஜேந்திரன், மற்றும் சாய் தீனா ஆகியோர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு தினமான சித்திரை மாதப் பிறப்பில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பழனி அருகே உள்ள நெய்காரன் பட்டியில் துவங்க உள்ளதாம். இதனைத் தொடர்ந்து பாலக்காடு அரண்மனை, குற்றாலம், ஹைதராபாத், மற்றும் சென்னை ஆகிய பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதாம். இப்படத்தின் ஸ்பெஷலாக ஒரு பாடல் காட்சிக்காக சென்னையில் மிகப் பிரம்மாண்ட செட்டு ஒன்று அமைக்கப்பட்டு வருகிறதாம்.


இப்படம் குறித்து இயக்குநர் மில்கா செல்வகுமார் கூறும்போது, 




ஆணவக்கொலையை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது. ஒரு ஜமீன் குடும்பத்திற்கு மருமகளாக வரப்போகும் பெண் அந்த வீட்டிற்குள் நுழைய, அடுத்தடுத்து பல பிரச்சினைகள் நடக்கின்றன. அதற்கு காரணம் யார் என்பதும் அதை ஜமீன் குடும்பத்தினரும் அந்த பெண்ணும் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும் தான் இந்த படத்தின் கதை.


நெஞ்சம் மறப்பதில்லை பாணியில் மறு ஜென்மக் கதையாக உருவாகும் 'கங்கா தேவி' படத்தில் ஹாரர், திரில்லிங், காமெடி என எல்லா அம்சங்களுமே கலந்து இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்