டெல்லி: இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் கவுதம் அதானி.
அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கெளதம் அதானி, ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி உள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் அதானி 12 இடத்திலும், முகேஷ் அம்பானி 13வது இடத்தையும் பிடித்துள்ளனர். இருவரின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்து உள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பரில் அம்பானி 14வது இடத்தை பிடித்திருந்தார். ஹூருன் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஐந்து நாட்களுக்கு ஒரு கோடீஸ்வரர் இந்தியாவில் உருவாகி வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக 270 பேர் ஆயிரம் கோடிக்கு அதிகமான சொத்துக்களை வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆயிரம் கோடி மற்றும் அதற்கு மேல் அதிக சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 1539 ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 1334 பேரின் ஒட்டுமொத்த சொத்து விகிதம் உயர்ந்துள்ளதாகவும் 272 பேர் புதிய பணக்காரர்களாக உருவெடுத்து இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழில்துறைகளின் வளர்ச்சியாகும். மேலும் 205 பேரின் சொத்துக்கள் வீழ்ச்ச அடைந்திருப்பதாகவும், 45 பேர் இந்த பட்டியலில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் 354 பேர், ஆயிரம் கோடிக்கு மேல் அதிகமாக சொத்து வைத்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
டாப் 10 இந்திய பணக்காரர்களும், அவர்களின் சொத்து மதிப்பும்:
1. கவுதம் அதானி - 11.61 லட்சம் கோடி
2. முகேஷ் அம்பானி - 10.14 லட்சம் கோடி
3. ஷிவ் நாடார் - 3.14 லட்சம் கோடி
4. சைரஸ் பூனாவாலா - 2.89 கோடி
5. திலீப் சங்வி -2.49 லட்சம் கோடி 6. குமார்மங்கலம் பிர்லா - 2.35 லட்சம் கோடி
7. கோபிசந்த் ஹிந்துஜா- 1.92 லட்சம் கோடி
8. ராதாகிஷன் தமானி - 1.90 லட்சம் கோடி
9. அஸீம் பிரேம்ஜி - 1.90 லட்சம் கோடி
10. நீரஜ் பஜாஜ் - 1.62 லட்சம் கோடி
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}