பாகிஸ்தானுக்கான இந்தியத் துணைத் தூதராகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா

Aug 29, 2023,11:14 AM IST
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணை செயலாளராக உள்ள கீதிகா ஸ்ரீவத்சவா, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூரதகத்தில் துணைத் தூரகா பொறுப்பேற்கவுள்ளார்.

டெல்லியில் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலளராக பணியாற்றி வருகிறார் கீதிகா ஸ்ரீவத்சவா. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில்  துணைத் தூதராக மத்திய அரசு அவரை நியமித்துள்ளது.



தற்போது அந்தப் பொறுப்பில் சுரேஷ் குமார் இருந்து வருகிறார். அவர் டெல்லிக்கு திரும்புகிறார். 

2005ம் ஆண்டு ஐஎப்எஸ் அதிகாரியான கீதிகா ஸ்ரீவத்சவா, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் இந்தோ பசிபிக் பிரிவில் இணைச் செயலாளராக தற்போது உள்ளார்.  

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது தூதரகங்களில் தூதர் அந்தஸ்தில் அதிகாரிகளை நியமிக்கவில்லை. அவர்களது பதவிகளை துணைத் தூதர் என்ற அளவுக்கு குறைத்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்டிருந்த  சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தின் அந்தஸ்தை ஹை கமிஷன் அந்தஸ்துக்கு குறைத்தது பாகிஸ்தான். இதையடுத்து இந்தியாவும் அதே போல செய்தது என்பது நினைவிருக்கலாம்.

கீதிகா ஸ்ரீவத்சவா விரைவில் பாகிஸ்தான் சென்று தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி

news

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: வாக்குப்பதிவு நிறுத்தம்...போலீசுடன் திமுக வாக்குவாதம்!

news

தென்தமிழ் தலையங்கம்: டேட்டிங் ஆப் முதல் குழந்தைப் பேறு வரை.. சிங்கப்பூருக்கு வந்த சோதனை!

news

உன்னை என் மனதுக்குள் வைப்பேன் அன்பே!

news

சிந்தனைச் சிதறல்.. உணவையும் உறவையும் உள்ளன்போடு பகிர்வதில் நிறைவு காண்போம்!

news

நெருப்பும் நீரும்!

news

ஸ்வீட் மச்சான்.. அட நம்ம ஸ்மித் மச்சார்தாங்க.. இந்தியன் டா.. காலரைத் தூக்கி விட்டுக்கலாம்!

news

மனம் கொத்திப் புடவை .. ஒரு நிமிடக் கதை (28)

news

Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்

அதிகம் பார்க்கும் செய்திகள்