சென்னை: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகி, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான வழக்கில், அதிகாரிகளுக்கு இடையே கைமாறிய லஞ்சப் பணம் குறித்த அதிர்ச்சித் தகவல்களை வெளிக் கொண்டுவர புதிய விசாரணைக்குழு அமைக்கப்பட்டு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே வீரமணிக்கு எதிராக வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டும், அது குறித்து விசாரணை, நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வழக்கை முடித்து வைக்க காவல்துறை சார்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வீரமணியிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு தான் அவரை காப்பாற்ற பலரும் உதவியதாகவும், இந்த விவகாரத்தில் கிட்டதட்ட ரூ.10 முதல் ரூ.40 கோடி வரை கை மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய குழு:

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஜெம் கிரானைட்ஸ் அதிபர் வீரமணியிடம் லஞ்சம் பெற்ற அதிகாரிகள் யார் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் புதிய சிறப்பு விசாரணைக்குழு ஒன்றை அமைத்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எவ்வளவு பணம் கைமாறியது?
ஜெம் வீரமணி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, திமுக ஆட்சிக்காலத்தில் எவ்வளவு பணம் கைமாறியது? அந்தப் பணம் யார் யாருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது? என்பது குறித்து விரிவாக ஆராய இந்த சிறப்பு விசாரணைக்குழு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இவ்வழக்கில் தொடர்புடைய பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் வெளிவர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
பணப்பரிமாற்றம் குறித்து தீவிர விசாரணை:
ஜெம் வீரமணி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு இடையே நடந்துள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை (Money Transactions) முழுமையாக விசாரித்து உண்மையை கண்டறியவே இந்த புதிய சிறப்பு டீம் (Special Team) களமிறக்கப்பட்டுள்ளது. விபச்சார தடுப்பு பிரிவு ஒருபுறம் பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்து வரும் வேளையில், கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையிலான புதிய குழு பணப்பரிமாற்றம் மற்றும் லஞ்ச விவகாரங்களை தனி கவனம் செலுத்தி விசாரிக்க உள்ளது. இந்த உயர்மட்ட விசாரணை மூலம் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மற்றும் இதில் பின்னணியில் உள்ள நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஷ்ணு சஹஸ்ரநாமம்.. அம்புப் படுக்கையிலிருந்து.. பீஷ்மர் கற்பித்த ஸ்தோத்திரம்!
இள மீனாள்!
Golden memories: உம்முன்னு இருந்த.. ஜோ வா இப்படி??
ஜெம் கிரானைட்ஸ் வீரமணி வழக்கில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் யார்? விசாரிக்க சிறப்பு குழு அமைப்பு!
கோப்பையும் மயிலும்
The World I Carry Within
வட போச்சே!
Monday Motivation: தாலாட்டும் சில ஞாபகங்கள்
ஆளுக்கு 8 ஓட்டு.. 9 மாத மழலை எடுத்துக் கொடுத்த சீட்டு.. கலகலப்பாக முடிந்த பள்ளித் தலைவர் தேர்தல்!
{{comments.comment}}