Gentleman 2: கோலாகலமாக தொடங்கியது ஜென்டில்மேன் 2.. புத்துணர்ச்சியில் குஞ்சுமோன்!

Oct 09, 2023,10:58 AM IST
- சங்கமித்திரை

சென்னை: பிரபல தயாரிப்பாளர் கே.டி. குஞ்சுமோன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் இறங்கியுள்ளார். ஜென்டில்மேன் படத்தின் 2ம் பாகத்தை அவர் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், அர்ஜூன் நடிப்பில் உருவான பிரமாணட் படம்தான் ஜென்டில்மேன். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் இப்படம் மிகப் பெரிய பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் 2ம் பாகத்தை இப்போது கே.டி. குஞ்சுமோன் எடுக்கவுள்ளார்.



ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று  சென்னை சத்யா ஸ்டுடியோவில் துவங்கியது.

தமிழக  தகவல் ஒளிபரப்பு மற்றும் செய்தித்துறை அமைச்சர் எம்.பி.சாமிநாதன் அவர்கள் ஸ்விட்ச் ஆன் செய்ய, எம்.ஜி.ஆர்-ஜானகி காலேஜ் மற்றும் சத்யா ஸ்டுடியோ தலைவர் டாக்டர். குமார் ராஜேந்திரன் கிளாப் அடிக்க, கவிப்பேரரசு வைரமுத்து  ஆக்‌ஷன் சொல்ல.. படப்பிடிப்பு ஆரம்பமானது. 



முதல் காட்சியில், நாயகன் சேத்தன்,  நாயகி நயந்தாரா சக்ரவர்த்தி  நடிக்க படப்பிடிப்பு தொடங்கியது.  நிகழ்ச்சியில் கே.டி.குஞ்சுமோன் பேசுகையில், எனது ஆரம்ப காலகட்டங்களில் எம்.ஜி.ஆர் நடித்த பல படங்கள், சத்யா ஸ்டுடியோவில் வளர்ந்த சத்யா மூவீஸிந் பல படங்களை நான் வினியோகம் செய்துள்ளேன். என் வாழ்க்கையின் உயர்வுக்கு முக்கிய பங்களித்த இந்த சத்யா ஸ்டியோவில் ஜெண்டில்மேன்-ll
படபிடிப்பு துவங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.. என்றார் கே.டி.குஞ்சுமோன்.

தொடர்ந்து சென்னையிலேயே 25 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  சேத்தன், 
நயந்தாரா சக்கரவர்த்தி  தவிர, சித்தாரா , சத்யபிரியா , சுமன் , மைம் கோபி, புகழ், படவா கோபி , ராதாரவி 
பிரேம்குமார் , இமான் அண்ணாச்சி , வேலா ராமமூர்த்தி , ஆர் வி உதயகுமார்  உள்ளிட்டோர் படத்தில் இடம் பெற்றுள்ளனர். சென்னை, ஹைதராபாத், துபாய், மலேசியா , இலங்கையில் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

பாரத் பந்த்.. நாளை நாடு தழுவிய அளவில்.. தொழிற்சங்கங்களின் போராட்டம்.. பாதிப்பு வரமா?

news

அமெரிக்காவில் பெரும் சோகம்.. சுற்றுலா சென்ற இந்தியர், மனைவி, 2 பிள்ளைகளுடன் விபத்தில் சிக்கி பலி

news

வாய்க்கு வந்ததை வாக்குறுதி என அளித்துவிட்டு, மக்களையும் ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிச்சாமி!

news

21 நாட்களில் பணம் இரட்டிப்பு.. பெங்களூரைக் கலக்கிய கேரள தம்பதி தலைமறைவு.. அதி நவீன மோசடி!

news

பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து: ரயில்வே நிதியுதவி அறிவிப்பு!

news

Trump Taxes: அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த புதிய வரிகள்...எந்தெந்த நாடுகளுக்கு அதிக பாதிப்பு?

news

யாஷ் தயாள் இப்படியா செய்தார்?.. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பவுலர் மீது வந்த பகீர் புகார்!

news

பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: முக்கிய தலைவர்கள் இரங்கல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்