சென்னை: கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. இது அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. பாரம்பரிய முறைகளின் படி இந்த பொருட்களானது தயாரிக்கப் படுகிறது என்பதற்கான சான்றிதழாக இந்த புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றம் கொண்ட தயாரிப்புகளில் வைக்கப்படும் ஒரு முத்திரை ஆகும்.
இந்த குறியீட்டினை எளிதில் பெற்றுவிட முடியாது. அந்த பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமாக தகவல்கள் சேகரித்து மத்திய அரசிடம் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசும் அதனை ஆராய்ந்து அதற்கான தனித்தன்மையை கண்டுபிடித்த பின்னர் தான் அதற்கான குறியீட்டை வழங்கி வருகின்றது. இந்தியாவைப் பொறுத்தவரை, அதன் புவிசார் குறியீட்டின் அடையாள முத்திரையுடன் கூடிய தயாரிப்புகளானது நம்ப முடியாத வகையில் இந்தியாவின் விலை மதிப்பற்ற அரும்பொருட் களஞ்சியமாகக் கருதப்படுகின்றன.
பொதுவாக விவசாயப் பொருட்கள், உணவுப் பொருட்கள், மது மற்றும் மது பானங்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்துறைத் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட பயனர்களாகப் பதிவு செய்தவர்களைத் தவிர வேறு யாரும் இதன் பிரபலமான தயாரிப்புப் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதை குறியீடானது உறுதி செய்கிறது.
பல்வேறு சிறப்புகளுடன் கிடைக்கும் இந்த குறியீடு கும்பகோணம் வெற்றிலைக்கும், கன்னியாகுமரி தோவாளை மாணிக்க மாலைக்கும் கிடைத்துள்ளது. இரு பொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெறப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அறிவித்துள்ளார். முதன் முறையாக விவசாய பொருளான கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டை பொருத்தவரை இதுவரைக்கும் 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. மேலும், வந்தவாசி கோரைப்பாய், ஜவ்வாது புளி, கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Heavy Rain Alert: சென்னை மக்களே கவனம்.. 23, 23 தேதிகளில் சூப்பர் மழைக்கு வாய்ப்பிருப்பதாக IMD தகவல்!
தீபாவளிக் கொண்டாட்டம்.. பட்டாசு வெடித்து, பலகாரம் சாப்பிட்டு.. மழையுடன் கொண்டாடும் தமிழ்நாடு!
Deepavali Rush: தீபாவளிக்கு மட்டுமல்ல.. பொங்கலுக்கும் தொடரும்..ஏன் இந்த கூட்டம் நெரிசல்?
தீபாவளிக்கு இந்த ஊர்களில் எல்லாம் மழை இருக்காம்.. பட்டாசுகளைப் பார்த்து வெடிங்க மக்களே!
விடிஞ்சா தீபாவளி.. அலை அலையாக சொந்த ஊர்களில் குவிந்த மக்கள்.. வெறிச்சோடியது சென்னை
தீபாவளி ஸ்வீட்ஸ் மட்டும் போதுமா.. சூடான மொறுமொறு ஓமம் பக்கோடா செய்யலாமா!
தீபாவளி என்ற பெயர் வந்தது எப்படி.. பாதுகாப்பாக எப்படிக் கொண்டாடலாம்?
தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}