அடஈ ஸியா இருக்கே..  ஜெர்மன் அமைச்சரை ஆச்சரியப்பட வைத்த இந்தியாவின் யூபிஐ!

Aug 21, 2023,04:52 PM IST
பெங்களூரு : இந்தியா வந்துள்ள ஜெர்மன் டிஜிட்டல் துறை அமைச்சர், இங்கு யூபிஐ மூலம் பணபரித்தனை முறை சாலையோர வியாபாரிகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருவதை கண்டு ஆச்சரியம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரன்சி பயன்பாடு குறைந்து, டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையோர சிறு வியாபாரி முதல் பெரிய பிராண்டட் ஷோரூம்களிலும் கூட டிஜிட்டல் முறையிலேயே பண பரிவர்த்தனை நடக்க துவங்கி உள்ளது. இதனால் வியாபாரிகள் தாங்கள் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை யாராவது திருடி சென்று விடுவார்களோ என்ற பயம் இல்லாமல், தாங்கள் விற்பனை செய்த பொருளுக்கான பணம் நேரடியாக தங்களின் வங்கி கணக்கிற்கே சென்று விடுவதால் நிம்மதியாக இருந்து வருகிறார்கள்.



இந்தியாவின் இந்த யூபிஐ பண பரிவர்த்தனை மற்ற நாடுகளையும் ஆச்சரியப்பட வைப்பதுடன், மிகவும் கவர்ந்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் இந்தியா பெற்றுள்ள வெற்றியை கண்டு மற்ற உலக நாடுகள் பலவற்றிலும் இந்த முறையை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் ஜெர்மன் நாட்டின் டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் வோல்கர் விஸ்ஸிங், பெங்களூருவில் சாலையோர காய்கறி வியாபாரி ஒருவரிடம் பொருள் வாங்கி விட்டு, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி உள்ளார். இந்திய தூதர் அவருக்கு டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறையை கற்றுக் கொடுத்துள்ளார். மிக வேகமாக, அதே சமயம் பாதுகாப்பான முறையில் பணம் செலுத்தப்பட்டதை கண்டு விஸ்ஸிங் ஆச்சரியப்பட்டுள்ளார்.

ஜெர்மன் அமைச்சரின் இந்த அனுபவத்தை இந்திய தூதரர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் செம வைரலாகி உள்ளது. இதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த நெட்டிசன்கள், இந்தியாவின் மிகப் பெரிய சாதனைகளில் இதுவும் ஒன்று. இந்தியர் என்பதில் பெருமை கொள்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்