- பாவை.பு
கண்நிறைந்த கணவன் வேண்டும் என்று எண்ணாத மங்கை உண்டே. மாதங்களில் நான் மார்கழி என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.. இதிலிருந்தே இவ் மாதத்தின் மகிமையை உணரமுடிகிறது.
இம்மாதம் இறை வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருப்பதால் தான் பகவானுக்கே பிடத்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு கீதை உபதேசித்தது. (வைகுண்ட ஏகாதசி அன்று) ஆண்டாள் மார்கழி மாதம் முழுவதும் பாவை நோன்பு நோற்று (கிருஷ்ணரையே கணவனாக அடைந்தது). மஹாபாரத யுத்தம் தொடங்கியது. பாற்கடல் கடைந்த போது சிவபெருமான் நஞ்சுண்டு உலகத்தை காத்தது.
இவ்வளவு சிறப்பு மிக்க கிருஷ்ணருக்கு பிடித்த இந்த மார்கழி மாதத்தில் தான் ஆண்டாளும் நோன்பு இருந்து தனக்கு பிடித்த கிருஷ்ண னையே மணக்கிறார் ஆண்டாள். அதனால் தான் கன்னி பெண்கள் தான் நேசிக்கும் ஆண்மகனே மணாளனாக அல்லது தனக்கு தகுந்த மணாளன் அமைய வேண்டி சங்ககாலம் முதலே பெண்கள் நோன்பு நோற்கும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது.

நோன்பு இருக்க விரும்பும் கன்னி பெண்கள் விடியற்காலை எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி விட்டு வாசல் தெளித்து கோலம் இட்டு பிரம்மமுகுர்த்த நேரத்திற்குள்ளாக பூஜை அறையில் விளக்கு ஏற்றி வாசலிலும் இரண்டு விளக்கு வைக்க வேண்டும்.
பிறகு பூஜை அறையிலேயோ அல்லது அருகில் உள்ள கோவிலிலோ (சைவம் வைணவம்) ஆண்டாளின் திருப்பாவை மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பதிகங்களை பக்தியுடன் படிக்க வேண்டும். இவ்வாறு மார்கழி 30 நாளும் நோன்பு இருந்து வழிபட்டால் மனதிற்கு இனிய கணவன் கிடைப்பான் என்பது திண்ணம்.
எனவே கன்னி பெண்கள் அனைவரும் காத்தாயி தேவியை வணங்கி.. குற்றமில்லா கணவனையும் மண் மழை வளமும் பெறுகி நாடு செழித்து இருக்கவும் இறைவனின் அருளை முழுவதுமாக பெறவும். போற்றி நோற்போம் பாவை நோன்பை.
(பாவை. பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து
நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}