சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மார்பில் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், இந்த முறை தங்கள் கட்சி, கூட்டணி கட்சியான பாஜக.,வின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று காலை 11.45 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பகல் 12.12 மணிக்கு தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளதாக அறிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காததால், பாஜாகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம். தேசிய அளவில் தாமரை சின்னம் என்பது 'இரட்டை என்ஜின்' அரசாங்கத்தின் அடையாளமாகத் திகழ்கிறது. மேலும், நாங்கள் பாஜகவுடன் நேரடி கூட்டணியில் இருப்பதால், ஒருங்கிணைப்பை வலுப்படுத்த அவர்களின் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளோம்." தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளால் சின்னம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டாலும், கூட்டணியின் வெற்றியை உறுதி செய்வதே தற்போதைய இலக்கு என அவர் சுட்டிக்காட்டினார்.
"காங்கிரஸை காமராஜர் மன்னிக்கமாட்டார்" :

தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை மிகக்கடுமையாக விமர்சித்த ஜி.கே.வாசன், பெருந்தலைவர் காமராஜரின் பெயரைக் குறிப்பிட்டு உணர்ச்சிவசமாகப் பேசினார். காங்கிரஸ் கட்சி தற்போது கொண்டுள்ள கூட்டணி நிலைப்பாடுகள் காமராஜரின் கொள்கைகளுக்கு எதிரானது என அவர் சாடினார். "நெருக்கடி நிலை காலத்தில் காமராஜர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தார். அந்த வலியை வரலாறு மறக்காது," என்று அவர் நினைவு கூர்ந்தார். காமராஜரின் ஆன்மா இனி ஒருபோதும் காங்கிரஸை மன்னிக்காது எனக் குறிப்பிட்ட அவர், இன்று காங்கிரஸ் எந்தக் கட்சியோடு (திமுக மற்றும் பிற கட்சிகள்) கூட்டணி வைத்துள்ளது என்பதை மக்கள் கவனித்து வருகிறார்கள் என்று கோடிட்டுக் காட்டினார்.
அமைச்சர் தொகுதிகள் பலம் :
திமுக அமைச்சர்கள் பலரின் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக தலைமை ஒதுக்கி உள்ளதால் கூட்டணி கட்சிகளின் வெற்றி பாதிக்கப்படுமா? அது நெருக்கடியை தருமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன், அமைச்சர்களின் தொகுதிகளை ஒதுக்கி உள்ளதை நாங்கள் பலமாக பார்க்கிறோம் என தெரிவித்தார். சரியாக பகல் 12 மணிக்கு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அவர், 12.12 மணிக்கு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார்.
தமாகா போட்டியிடும் 5 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் :
ஒட்டன்சத்திரம்-விடியல் சேகர்
ஈரோடு மேற்கு -யுவராஜ்
ராணிப்பேட்டை-வி.எம் கார்த்திகேயன்
கிள்ளியூர் -நிவின் சைமன்
கும்பகோணம் - அசோக் குமார்
திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்
மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?
Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!
தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!
என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?
தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!
Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?
Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு
{{comments.comment}}