உலக நாடுகளிலும் புக்கிங்கில் சாதனை படைக்கும்.. விஜயின் கோட்.. ஆர்வத்தில் வெளிநாட்டு ரசிகர்கள்!

Sep 03, 2024,04:43 PM IST

சென்னை: விஜய் நடிப்பில் உருவான கோட் திரைப்படம் உலகம்  முழுவதும் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில், இப்படம் வெளியாகும் முன்பே டிக்கெட் புக்கிங்கில் வெளிநாடுகளில் சாதனை படைத்து வருகிறது .


ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ளது. இப்படத்தின் ஓப்பனிங் ஷோவுக்கான ரசிகர்கள் ஆவலுடன் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர். மேலும் படத்தின் அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிடும் படக் குழுவினரால் படத்தின் எதிர்பார்ப்பும் எகிற வைத்து வருகிறது.




அமெரிக்காவின் முன்னணி பட வெளியீட்டு நிறுவனம் ஹம்சினி  பிரைவேட் லிமிடெட் நிறுவனம். இந்நிறுவனம் தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோக்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இந்த நிறுவனம் அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் எங்கும் வெளியிட்டு வருகிறது. அதன்படி மாஸ்டர்,பீஸ்ட் என தளபதி நடித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. 


அதேபோல் லியோ படம் ஐரோப்பாவில் வெளியிடப்பட்டது. இப்படங்கள் அனைத்தும் உலக நாடுகளில் பெரும் வரவேற்பையும் ஆதரவையும் பெற்றுள்ளது. இதுவரை ஹம்சி என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 140 படங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் நடிகர் விஜய் தந்தை, மகன் என இரண்டு வேடங்களில் நடித்து அசத்தியிருக்கும் கோட் படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக தயாராக உள்ள நிலையில் வெளியீட்டிற்கு முன்னதாகவே வட அமெரிக்கா இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் ஹம்சினி என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.


இதுவரை இல்லாத அளவிற்கு கோட் படம் அமெரிக்காவில் 650 இடங்களில் 1700 திரையரங்குகளில் வெளியிடுகிறது. தற்போது அட்வான்ஸ் புக்கிங் ஓபன் ஆன நிலையில் ரசிகர்கள் நான் நீ என முந்தி எடுத்துக்கொண்டு புக்கிங் செய்து வரும் வருகின்றனர். இதனால் உலக அளவில் தென் இந்திய திரைப்பட சாதனைகளை முறியடித்து வருகிறது கோட் திரைப்படம். இன்னும் பல சாதனைகளை கோட் திரைப்படம் முறியடிக்குமா? என எதிர்பார்த்து எழுந்துள்ளது.


அதே சமயம் தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவாரா படத்தையும் ஓவர்சீஸ் வெளியிடுகிறது‌. இப்படத்திற்கும் அட்வான்ஸ் புக்கிங் துவங்கி சாதனை படைத்து வருகிறதாம்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்