சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,350க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகிறது. உலகில் நிலவி வரும் பொருளாதார நிலை, அரசியல் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் ஆகிய பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
மத்திய பட்ஜெட்டில் தங்கம்,வெள்ளி மீதான சுங்க வரி குறைக்கப்பட்டதன் எதிரொலியாக ரூ.55,000க்கு விற்கப்பட்ட தங்கம் தற்பொழுது சவரன் ரூ.50,000த்திற்கு விற்கப்பட்டு வருகிறது.கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1120 குறைந்திருந்த தங்கம் இன்று ஏற்றம் கண்டுள்ளது.
சென்னையில் இன்றைய தங்கம் விலை

சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.20 அதிகரித்து 6,350 ரூபாயாக உள்ளது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 50,800 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.63,500 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,35,000க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6,927 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.55,416 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.69,270 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.6,92,700க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,365க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,942க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,350க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,927க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,355க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.6,932க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
கடந்த 2 நாட்களாக வெள்ளி விலை குறைந்திருந்த நிலையில், இன்று கிராமிற்கு 0.50 காசுகள் குறைந்து சவரனுக்கு ரூ.86.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 692 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.865 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,650 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.86,500 ஆக உள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}