3வது நாளாக கிடு கிடு என உயர்ந்து வரும் தங்கம்... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.400 உயர்வு

Nov 20, 2024,01:00 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  சவரனுக்கு இன்று ரூ.400 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை  ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


நவம்பர் மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்து வந்தது. இந்த விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த தங்கம், கடந்த 3 நாட்களாக உயர்ந்து வருகிறது. நவம்பர் 18,19,20 ஆகிய 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் இன்றைய (20.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.400 அதிகரித்து ரூ.7,115க்கும், ஒரு சவரன் ரூ.56,920க்கும் விற்கப்பட்டு வருகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 56,920 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.71,150 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,11,500க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,762 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,096 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.77,620 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,76,200க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,130க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,777க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,115க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,762க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,120க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,767க்கும் விற்கப்படுகிறது.


முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...


குவைத் - ரூ. 6,592

மலேசியா - ரூ.6,854

ஓமன் - ரூ. 6,893

சவுதி ஆரேபியா - ரூ. 6,766

சிங்கப்பூர் - ரூ.6,845

அமெரிக்கா - ரூ. 6,582

துபாய் - ரூ.6,778

கனடா - ரூ.6,891

ஆஸ்திரேலியா - ரூ.6,871


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

news

"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி

news

இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்

news

சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு

news

அப்பா மாதிரி நாமளும் ஆகணும்!

news

இரயில் சினேகம்.. ஒரு நிமிடக் கதை (21)

அதிகம் பார்க்கும் செய்திகள்