Gold Rate: தொடர் ஏற்றத்தில் தங்கம்ம்ம்.... சரிவில் வெள்ள்ள்ளி... இதோ இன்றைய விலை நிலவரம்ம்ம்!

Nov 03, 2023,12:33 PM IST

சென்னை:  தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை நேற்றும் இன்றும் உயர்ந்துள்ளது.


மீண்டும் தங்கம் விலை உயரத் தொடங்கியிருப்பதால் வாடிக்கையாளர்கள் அடடா வடை போச்சே என்ற மன நிலையில் உள்ளனர். 


இன்று சவரனுக்கு ரூ. 40 அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் வாடிக்கையாளர்களிடையே சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளி மற்றும் முகூர்த்த நாட்களை முன்னிட்டு தங்கம் விலை தாறுமாறாக ஏறும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 




1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 5700 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 5 ரூபாய் அதிகரித்து சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. 8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45600 ரூபாயாக உள்ளது.  1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 6218 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 40 ரூபாய் அதிகமாகும். 8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.49774 ஆக உள்ளது.


தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி விலை ரூபாய்.74.10 காசாக உள்ளது.  8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 592.80 காசாக உள்ளது.  தங்கம் விலை ஏற்றம் கண்டு வருவதினால் முதலீட்டாளர்களும் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். 

இதனால் சரிவில் இருந்த தங்கம் தேவை அதிகரித்ததன்  காரணத்தினால் உயரத்தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!

news

ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்

news

துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

அதிகம் பார்க்கும் செய்திகள்