சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.240 அதிகரித்துள்ளது. ஒரு கிராமின் விலை ரூ.7,145க்கும், ஒரு சவரன் ரூ.57,160க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கடந்த 4 நாட்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்கம் விலை கடந்த 18ம் தேதி சவரனுக்கு ரூ.480ம், 19ம் தேதி சவரனக்கு ரூ.560ம், 20ம் தேதி சவரனுக்கு ரூ.400ம் உயர்ந்திருந்தது. இந்நிலையில் இன்றாவது சற்று குறையும் என்று எதிர்பார்த்திருந்த வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. இன்றும் சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய (21.11.24) தங்கம் விலை....

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.240 அதிகரித்து ரூ.7,145க்கும், ஒரு சவரன் ரூ.57,160க்கும் விற்கப்பட்டு வருகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 57,160 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.71,450 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,14,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,795 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.62,360 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.77,950 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,79,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,795க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,160க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,810க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,795க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,795க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,795க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,145க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,795க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,150க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,800க்கும் விற்கப்படுகிறது.
முக்கிய நாடுகளில் இன்றைய 22 கேரட் தங்கத்தின் விலை...
குவைத் - ரூ. 6,650
மலேசியா - ரூ.6,862
ஓமன் - ரூ. 6,952
சவுதி ஆரேபியா - ரூ. 6,814
சிங்கப்பூர் - ரூ.6,829
அமெரிக்கா - ரூ. 6,586
துபாய் - ரூ.6,845
கனடா - ரூ.6,983
ஆஸ்திரேலியா - ரூ.6,866
சென்னையில் இன்றைய வெள்ளி விலை....
தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
1 கிராம் வெள்ளி விலை ரூ.101 ஆக உள்ளது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 808 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,010 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
குழந்தையின் மொழி .. சொல்லுக்கு முன் பிறக்கும் இசை!
சிறிய புன்னகையில் பெரிய உலகம் கொண்டாடும் நாள்!
குழந்தைகள்.. இறைவன் கொடுத்த பொக்கிஷங்கள்!
விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்.. உங்களின் வெற்றியைக் கண்டு மகிழ்வேன்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
குழந்தைகள்.. சிரிப்பிலே தேன்சிட்டு.. சிந்தனையிலோ மணி மொட்டு!
நிலையற்ற விலையில் தங்கம் விலை... நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைந்தது!
பிஞ்சுகள்!
தேர்தல் நெருங்கும்போதுதான் எங்களது முடிவு.. அதுவரை சஸ்பென்ஸ்.. பிரேமலதா விஜயகாந்த்
பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் 2025.. டெபாசிட்டை இழக்கும் எதிர்க்கட்சிகள்!
{{comments.comment}}