ஆத்தாடி.. தங்கம் விலை அதிரடியாக குறைவு.. எவ்வளவுன்னு மட்டும் கேட்டா அசந்துருவீங்க...!

Apr 23, 2024,11:38 AM IST

  சென்னை: கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றும் இன்றும்  குறைந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ள நிலையில், இன்று  மட்டும் சவரனுக்கு  ரூ.1,160 குறைந்துள்ளது. இந்த விலை குறைவு    வாடிக்கையாளர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

       

தங்கம் விலை இன்று அதிரடியாக விலை  குறைந்துள்ளது. 200 அல்ல 300 அல்ல சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது.    

இந்த விலை குறைவு   வாடிக்கையாளர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம்  விலை கடந்த பல நாட்களாகவே உயர்ந்து வந்தது. உயர்வு என்றால் சாதாரண உயர்வு அல்ல வரலாற்றின் உச்சத்திற்கே  சென்று விட்டது. 


இந்த விலை ஏற்றம் சாதாரண மக்களை கதி  கலங்க வைத்து என்றே செல்லலாம். இந்நிலையில தங்கம் விலை குறைவு என்பது சாதாரண மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை   மகிழ்ச்சி மழையில் நனைத்துள்ளது. தங்கம்  மட்டும் இல்லை மக்களே      வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

  சென்னையில் இன்றைய தங்கம் விலை...




இன்றைய தங்கத்தின்         விலையை பொருத்தவரை,     1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,700       ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 145 ரூபாய்  குறைந்து சவரனுக்கு ரூ.1160 ஆக குறைந்துள்ளது. 8 கிராம் ஆபரண      தங்கத்தின் விலை 53600   ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,310 ரூபாயாக உள்ளது. 8  கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,480 ஆக உள்ளது. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,160 குறைந்துள்ள நிலையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,256 குறைந்துள்ளது. 


சென்னையில் வெள்ளி விலை...


இன்றைய வெள்ளியின் விலை குறைந்துள்ளது.  இன்று 1 கிராம் வெள்ளி    விலை ரூ.2.50 பைசா குறைந்து 86.50 ரூபாயாக உள்ளது. 8 கிராம் வெள்ளி   விலை ரூபாய் 692 ஆக உள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,500  குறைந்து ரூ.86,500 க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

news

திமுக அரசில், ஊழலும், மோசடியும் நடைபெறாத துறையே இல்லை என்பது உறுதி: அண்ணாமலை

news

டிசம்பர் 18ல் ஈரோட்டில் விஜய் பிரச்சாரத்திற்கு எந்தத் தடையும் இல்லை: செங்கோட்டையன் பேட்டி

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

குடிமகன்களே அலர்ட் இருங்கப்பா..குடிச்சிட்டு வந்து மனைவிய அடிச்சா மட்டுமில்ல திட்டினாலே..இனி களி தான்

news

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பழமொழியும் உண்மை பொருளும்!

news

தாழ்த்த நினைத்த தீமைகள்.. தடமாய் இருந்து உயர்த்தும்!

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்