சென்னை, புறநகர்களில் பரவலாக கன மழை.. அடுத்த 2 மணி நேரத்துக்கு இதுதான் அப்டேட்!

Jul 18, 2024,05:42 PM IST

சென்னை: சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.


வானிலை மையத்தின் அறிவிப்பின்படி கேடிசிசி பெல்ட் எனப்படும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும். இவை தவிர திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




சில இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு மழை இருக்கும். போக்குவரத்து பாதிக்கப்படும் அளவுக்கு சில இடங்களில் மழை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை விட்டு விட்டு வெளுத்துக் கொண்டுள்ளது. சென்னையில் சில நாட்களாகவே வானம் மூடிக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் பெரிதாக மழை இல்லை. இந்த நிலையில் இன்று மாலை சூப்பரான மழையை மக்கள் காண நேர்ந்தது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. அலுவலகம் சென்றோர் திரும்பி வரும் நேரத்தில் மழை பெய்ததால் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்