இமேஜில் உள்ள வார்த்தைகளை மொழிபெயர்ப்பதை ஈஸியாக்கிய கூகுள்.. இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

Jan 10, 2024,06:42 PM IST

டில்லி : வாடிக்கையாளர்களின் வசதிக்காக கூகுள் பல சேவைகளை, உலகின் அனைத்து மொழி பேசுபவர்களும் எளிமையாக பயன்படுத்தும் வகையில் அறிமுகம் செய்து வருகிறது. google traslator மூலம் எந்த மொழியில் உள்ள வார்த்தையையும் நமக்கு வேண்டிய மொழிக்கு மொழிபெயர்த்துக் கொள்ள முடியும். இது தான் தெரியுமே? இதுல என்ன புதுசுன்னு கேட்குறீங்களா? இருக்குங்க.


ஆரம்பத்தில் text to text என்ற முறையில் மட்டுமே கூகுள் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதாவது இரண்டு "பெட்டிகள்" கொடுத்து அதில் எந்த மொழியில் இருப்பதை எந்த மொழிக்கு மாற்ற வேண்டும் என்பதை இரண்டு பெட்டிகளிலும் தேர்வு செய்த கொண்டு, முதல் பெட்டியில் மொழிபெயர்க்க வேண்டிய வார்த்தை அல்லது வரி அல்லது பத்தியை பேஸ்ட் செய்தால், அடுத்த விநாடியே இரண்டாவது பெட்டியில் உங்களுக்கு வேண்டிய மொழியில் அந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டு விடும். இந்த சேவையை கம்ப்யூட்டரில் டைப் செய்ய தெரியாதவர்களும் பயன்படுத்த வசதியாக voice to text என்ற சேவையை அறிமுகம் செய்தது. 




google search பாக்சிற்கு அருகில் மைக் ஐகானை அறிமுகம் செய்து voice to text traslator வசதியை அறிமுகம் செய்தது. நாம் எந்த மொழியில் பேசினாலும், அடுத்த பெட்டியில் நமக்கு தேவைப்படும் மொழியில் அதை மொழிபெயர்த்து தந்து விடும் கூகுள். இது தாய்மொழி தவிர மற்ற மொழிகள் தெரியாத பலருக்கும் மிகவும் வசதியாக இருந்தது. குறிப்பாக ஆங்கிலம் பேசத் தெரியாதவர்களுக்கு இது மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. 


தற்போது அடுத்த கட்டமாக image to text translator என்ற வசதியை கூகுள் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இமேஜ் வடிவில் இருக்கும் போட்டோவில் இருக்கும் வார்த்தைகளை கூட கூகுள் உங்களுக்கு வேண்டிய மொழிகளில் மொழிபெயர்த்து தந்து விடும். 


இதனால் நீங்கள் உங்களுக்கு மொழிபெயர்ப்பு செய்ய வேண்டிய text ஐ copy-paste செய்யவோ அல்லது டைப் செய்யவோ தேவையில்லை. மிக எளிமையான முறையில் புகைப்பட வடிவில் இருக்கும் டெக்ஸ்ட் எந்த மொழியில் இருந்தாலும் அதை எவ்வாறு மொழிபெயர்ப்பு செய்வது என்பதை வாங்க தெரிந்து கொள்ளலாம்.


* கூகுள் ஆப் அல்லது பிரெளசரை திறந்து, google traslator ஐ திறந்து கொள்ளுங்கள்.


* எந்த மொழிக்கு உங்களுக்கு மொழியை மாற்றி தர வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


* google search பாக்ஸ் அருகில் இருக்கும் கேமிராவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


* தற்போது உங்களுக்கு மொழி மாற்றம் செய்யப்பட வேண்டிய இமேஜை அதில் அப்லோடு செய்யுங்கள். அல்லது அந்த இமேஜின் லிங்க்கை கீழே உள்ள பாக்சில் பதிவிடுங்கள். அவ்வளவு தான், உங்களுக்கு வேண்டிய மொழியில் அந்த இமேஜில் உள்ள வரிகள் அனைத்தும் மொழிபெயர்க்கப்பட்டு விடும்.




* ஒருவேளை ஏதாவது ஒரு இணையத்தில் இருந்து உங்களால் டெக்ஸ் காப்பி செய்ய முடியவில்லை. ஆனால் அதை மொழிபெயர்க்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட அந்த இணையதளத்திற்கு சென்று, ரைட் கிளிக் செய்யுங்கள். அதில் காட்டும் ஆப்ஷன்களில் search images with google என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.


* இப்போதும் தோன்றும் அம்புக்குறியை பயன்படுத்தி, அந்த இணையத்தில் உங்களுக்கு தேவைப்படும் டெக்ஸ்டை காப்பி செய்து கொள்ளுங்கள்.


* நீங்கள் உங்களுக்கு தேவையான டெக்ஸ்டை அடைப்புக்குறிக்குள் தேர்வு செய்ததும் தானாக பக்கத்தில் ஒரு கூகுள் பகுதி ஓப்பனாகி மொழியை தேர்வு செய்யச் சொல்லி கேட்கும்.


* நீங்கள் மொழியை தேர்வு செய்ததும், நீங்கள் தேர்வு செய்து வைத்திருந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் வார்த்தைகள் அனைத்தும் நீங்கள் தேர்வு செய்த மொழிக்கு மாற்றம் செய்யப்பட்டு விடும்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தின் SIR... நவ 2ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நெருங்கும் மோன்தா புயல்.. தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வானிலை மையம் எச்சரிக்கை!

news

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: பலியானவர்களின் குடும்பங்களை சந்தித்து விஜய் ஆறுதல்!

news

மழையினால் சரக்குந்துகளிலேயே முளைத்த 36,000 நெல் மூட்டைகள்..திமுக அரசின் புதிய சாதனை:அன்புமணி ராமதாஸ்

news

பொய்கள் மூலம் திசைதிருப்ப முயற்சிக்க வேண்டாம்..தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர்:நயினார்

news

நடித்தாலே நாட்டை ஆளக் கூடிய அனைத்து திறமையும் வந்து விடுகிறது... இது ரொம்ப கொடுமையானது: சீமான்!

news

கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

news

மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.. சீமான் கண்டனம்

news

ராகுல்காந்தி என் மீது காட்டும் அன்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அதிகம் பார்க்கும் செய்திகள்