என்னங்க சொல்றீங்க?.. செப்டம்பருக்குப் பிறகு ஜிமெயில் கணக்கு இருக்காதா?.. அப்டேட்டை தெரிஞ்சுக்கங்க!

Sep 12, 2024,05:11 PM IST

நியூயார்க் : செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு ஜிமெயில் கணக்குகளை நீக்க கூகுள் நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உலகம் முழுவதிலும் ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.


இன்டர்நெட், இமெயில், வாட்ஸ்ஆப் இல்லாத உலகை நினைத்து கூட பார்க்க முடியாது என்ற நிலைக்கு உலகம் சென்று கொண்டிருக்கிறது. இமெயில் அறிமுகம் ஆன பிறகு ஆரம்பத்தில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டு, பிரபலமாக இருந்தது யாகூ மெயில் தான். ஆனால் கூகுள் வந்த பிறகு, கூகுள் ஆண்டவர் இல்லாமல் உலகில் ஒரு துரும்பும் அசையாது, அவரைக் கேட்காமல் எதுவும் செய்வது கிடையாது என்ற நிலை உருவாகி விட்டது. தற்போது உலகம் முழுவதும் அதிகமானவர்கள் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் கணக்குகளை தான் பயன்படுத்தி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி 1.5 பில்லியன் மக்கள் ஜிமெயில் கணக்குகளை பயன்படுத்தி வருகிறார்கள். இவை அனைத்தும் கூகுள் சர்வரால் இலவச சேவையாக வழங்கப்பட்டு வருகிறது. 



இந்நிலையில் நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை நீக்க முடிவு செய்திருப்பதாக கூகுள் நிறுவனம் சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டது. தன்னுடைய புதிய கொள்கையை உடனடியாக அமல்படுத்த முடிவு செய்துள்ள கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு செயல்பாட்டில் இல்லாமல் இருக்கும் ஜிமெயில் கணக்குகளை முற்றிலுமாக நீக்க முடிவு செய்துள்ளது. 


அதாவது 2 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருக்கும் தனிநபர்களின் கூகுள் கணக்குகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 2 ஆண்டுகளில் ஒருமுறை கூட தன்னுடைய ஜிமெயில் கணக்கை லாக்இன் செய்யாமலும், அதிலிருந்து எந்த செயல்பாடும் செய்யாமலும் வைத்திருந்தால் அந்த கணக்கு நிரந்தரமாக அகற்றப்படுகிறது. கூகுளின் இந்த புதிய கொள்கை, நிறுவனங்கள், பள்ளி அல்லது மற்ற தொழில் நிறுவனங்களின் ஜிமெயில் கணக்குகளை பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


யாராவது பயன்படுத்தாமல் ஜிமெயில் வைத்திருந்து, அதில் முக்கிய தகவல்கள் ஏதாவது சேமித்து வைத்திருந்தால் அதை உடனடியாக பாதுகாத்து வைத்துக் கொள்ளவோ அல்லது கணக்கைப் புதுப்பித்து பயன்பாட்டிற்கும் மாற்றிக் கொள்வது முக்கிய தகவல்களை இழப்பதை தவிர்ப்பதற்கு ஈஸியாக இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. கணக்கை செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு அந்த கணக்கிங் இருந்து மற்ற கணக்கிற்கு போட்டோக்கள், யூட்யூப் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?

news

வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!

news

டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா

news

முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்

news

தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!

news

அரங்கன் யாவுமே அறிந்தவனே!

news

அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து

news

தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!

news

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD

அதிகம் பார்க்கும் செய்திகள்