சென்னை: நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார். அவருக்கு வயது 67. அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுப்பிரமணியன் என்ற இயற் பெயர் கொண்ட நடிகர் கவுண்டமணி, தமிழ்த் திரையுலகின் மிகப் பெரிய காமெடி நடிகர்களில் ஒருவர். அவருக்கு இணையான காமெடியனை இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்க்கவில்லை. காமெடி மட்டுமல்லாமல் குணச்சித்திரம், வில்லத்தனம், ஹீரோ என பல வேடங்களில் நடித்துள்ளார் கவுண்டமணி.

சமூக சீர்திருத்தக் கருத்துக்களை போகிற போக்கில் சொல்லி புரட்சிகரமான நடிகராகவும் விளங்கியவர் கவுண்டமணி. கடந்த 1963ம் ஆண்டு அவருக்கும் சாந்திக்கும் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணமாகும். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். 67 வயதான சாந்தி உடல் நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று மரணமடைந்தார்.
சாந்தியின் மறைவைத் தொடர்ந்து திரையுலகினர் பலரும் கவுண்டமணிக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தேவாதி தேவா.. தெருவோர கானாவை தேனாக்கியவரே!
No Sunday leave for Women: தினம்தினம் தொடர்கதையே!
சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
வைத்தியம் - ஒரு நிமிடக் கதை (39)
ஆனந்தம் அமைதி வேண்டுமென்றால் ..!
தேனிசை ஓய்ந்தது… நினைவுகள் ஓயவில்லை!
தென்றலுடன் கலந்த தேனிசைத் தேவா
3ம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்ட.. கோயம்பேடு ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் கோயில்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
{{comments.comment}}