சென்னை: ஆளுநர் ஆர். என். ரவி இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடத்திய குடியரசு தின விழா வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக கூட்டணிக் கட்சிகள் மொத்தமாக பங்கேற்கவில்லை. அதேசமயம், அதிமுக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சிகள் கலந்து கொண்டன.
குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வுகளின்போது ஆளுநர் மாளிகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். அந்த வகையில் இன்றும் சிறப்பு விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசு, பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், பல்துறைப் பிரமுகர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இன்று மாலை தொடங்கிய விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சார்பில் யாரும் கலந்து கொள்ளவில்லை. திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வரவில்லை.

அதேபோல நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அக்கட்சிகளும் நிகழ்ச்சிக்கு வரவில்லை.
அதேசமயம் பாஜக சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை, எச். ராஜா, சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் முன்னாள் ஜெயக்குமார் மற்றும் பாலகங்கா பங்கேற்றனர். தேமுதிக சார்பில் பார்த்தசாரதி கலந்து கொண்டார். பிரேமலதா விஜயகாந்த் வரவில்லை. புதிய தமிழகம் சார்பில் அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கலந்து கொண்டார்.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜனும், முன்னாள் ஆளுநர் என்ற அந்தஸ்தில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலையும், எச். ராஜாவும், ஜெயக்குமாரும் சிரித்து சிரித்துப் பேசிக் கொண்டது பார்ப்போரின் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஓய்வூதியத் திட்டம் ஏமாற்று வேலை - நிர்மல் குமார் பேட்டி
அதிரடி காட்டும் தங்கம் விலை...அதிர்ச்சியில் மக்கள்...ஒரே நாளில் ரூ.1280 உயர்வு
பாரதிராஜா நலமாக உள்ளார்... அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை
யாருடன் கூட்டணி என ஜன.,9 மாநாட்டில் அறிவிப்பு...தேமுதிக பிரேமலதா திட்டவட்டம்
திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்...புதிதாக பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் மனு
ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழை பெய்யவாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்!
இது அண்ணன்-தம்பி பொங்கல்...பராசக்தி ஆடியோ விழாவில் சிவகார்த்திகேயன் சொன்ன செம தகவல்
மோடி பொங்கல் விழா: திருச்சியில் அமித்ஷா கொண்டாட்டம்
{{comments.comment}}