சென்னை: யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
ஐஏஎஸ்., ஐபிஎஸ்., மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான குரூப் - ஏ மற்றும் பி பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் கட்ட தேர்வு நடைபெற்றது. இதில் 9 லட்சத்து 92 ஆயிரத்து 599 தேர்வர்கள் விண்ணப்பித்தனர்.அவர்களில் 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 14,627 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17 வரையில் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி முடிவு நேற்று வெளியாகின.

இந்தத் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 57 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகமான தேர்ச்சியாகும். இந்தாண்டு நடந்த தேர்வில் முதல் 100 இடங்களுக்குள் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம்பெற்றுள்ளனர். அதில், தர்மபுரியை சேர்ந்த சிவசந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளனர்.
இந்நிலையில் , யுபிஎஸ்சி 2024 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேர்வுக்கு தயாராவதும், வெல்வதும் எளிதல்ல. உங்கள் பயணத்துக்கு வாழ்த்துகள். உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டே இருங்கள். பொது அறிவையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்று யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் ரவி அறிவுரை வழங்கியுள்ளார்.
மக்களின் உழைப்பால் வளர்ச்சி அடைந்த இந்தியா சாத்தியம்...குடியரசு தின உரையில் ஜனாதிபதி பேச்சு
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
{{comments.comment}}