ரூ. 4.6 கோடி.. வாங்கிய பரிசுப் பணத்தில் கால்வாசியை வரியாக கட்டும் குகேஷ்.. தோனி சம்பளத்தை விட அதிகம்

Dec 17, 2024,05:45 PM IST

சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்று 11.34 கோடி ரூபாய் பரிசுத்தொகை பெற்ற குகேஷ், தோனி ஐ பி எல் லில் வாங்கும் சம்பளத்தைவிட அதிகளவிலான பணத்தை, வரியாக கட்டவுள்ளார்.


உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் 14வது சுற்றில் சீனாவை சேர்ந்த டிங் லிரெனை வீழ்த்தி செஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக மிகவும் இளம் வயதில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இளைஞரான தமிழக செஸ் வீரர் குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது .



சாதனை நாயகன் குகேஷிற்கு உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. மேலும் தமிழக வீரரின் செஸ் சாதனையை பாராட்டி தமிழக அரசு சார்பில் ஐந்து கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது .

இந்த நிலையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் குகேஷ் வென்ற பரிசுத்தொகை மொத்தம் 11.45 கோடியாகும். இத்தொகைக்கு 4.64 கோடி வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமான வரி 87 ஏ விற்கு கீழ் 3.28 கோடியும்,  சுகாதாரம் மற்றும் கல்வி செஸ் வரியாக 17,98,000 என மொத்தமாக 42 சதவீதம் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உண்மையில் ஐபிஎல்லில் தோனி வாங்கும் 4 கோடி ரூபாய் சம்பளத்தை விட குகேஷுக்கு விதிக்கப்பட்ட வரிப்பணம் அதிகம் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குகேஷ் செய்துள்ளது உலக வரலாற்றிலேயே முதல் முறையாக நடந்துள்ள மிகப் பெரிய சாதனை. உலகளாவிய சாதனையைப் படைத்துள்ள குகேஷுக்கு முழுமையாக வரி விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

அதிகம் பார்க்கும் செய்திகள்