வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது இரண்டாவது முறையாக மீண்டும் துப்பாக்கிச் சூடு தாக்குதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அமெரிக்காவை மீண்டும் பரபரப்பாக்கி உள்ளது.
அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரங்கள் அமெரிக்காவில் காரசாரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் போட்டுகிறார்கள். அதிபர் தேர்தலில் இவர்கள் இருவரிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கமலா ஹாரிஸ் பற்றி டிரம்ப் முன் வைக்கும் விமர்சனங்களும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் அதிபர் தேர்தலுக்காக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினார். இதில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினார். துப்பாக்கி குண்டு அவரது வலது காதில் பட்டதால், அவருக்கு காயம் ஏற்பட்டது. இது பரபரப்பு சற்று அடங்கி, தற்போது தேர்தல் பிரசாரத்தில் குறித்து அனைவரும் தீவிரமாக கவனம் செலுத்த துவங்கினர். இந்நிலையில் டிரம்ப் மீது மீண்டும் தற்போது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புளோரிடா மாகாணத்தில் உள்ள தனது வீட்டில் டிரம்ப், கோல்ப் மைதானத்தில் இருந்த போது அவரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்வதற்கு முயற்சி நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது டிரம்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது என்றும், மைதானத்திற்கு அருகே இரண்டு இரண்டு நபர்கள் இடையே இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் உடனடியாக டிரம்ப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் என சொல்லப்பட்டார்.
இரண்டாவது முறையாக டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சி செய்யப்பட்டுள்ள விவகாரம் அமெரிக்க மக்களிடமும், அதிபர் தேர்தலிலும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தற்போது டிரம்ப் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருப்பதாக குடியரசுக் கட்சி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}