- அ.கோகிலா தேவி
டெல்லி: சீக்கிய மதத்தின் பத்தாவது மற்றும் இறுதி மனித குருவான குரு கோவிந்த் சிங் அவர்களின் பிறந்தநாள் (பிரகாஷ் பர்வ்) இன்று டிசம்பர் 27 2025 நாடு முழுவதும் குறிப்பாக வடமாநிலங்களில் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.
குரு கோவிந்த் சிங் நீதியின் நிழல் மற்றும் வீரத்தின் சின்னம். குரு கோவிந்த் சிங் அவர்கள் வெறும் ஆன்மீகத் தலைவர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த போர்வீரர், கவிஞர் மற்றும் தத்துவஞானி. 1666-ல் பாட்னாவில் பிறந்த அவர் தனது 9-வது வயதிலேயே குருவாகப் பொறுப்பேற்றார். முகலாயர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக அவர் காட்டிய துணிச்சல் இன்றும் இந்திய வரலாற்றின் வீரப் பக்கமாக உள்ளது.
1699-ஆம் ஆண்டு வைசாகி திருநாளில் 'கல்சா' என்ற புனிதப் படையை அவர் உருவாக்கினார். இது சாதி, மதம் மற்றும் வர்க்கப் பாகுபாடுகளைக் களைந்து அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை நிலைநாட்டியது. பஞ்ச் பியாரே என்ற அமைப்பின் மூலம் சீக்கியர்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை அவர் வழங்கினார்.

சீக்கியர்களின் அடையாளமாகவும் ஒழுக்கத்தின் சின்னமாகவும் கருதப்படும் 5 முக்கிய அம்சங்களை (5 Ks) அவரே அறிமுகப்படுத்தினார்.
கேஷ் (Kesh) வெட்டப்படாத முடி.
கங்கா (Kangha) மரத்தினால் ஆன சீப்பு.
காரா (Kara) இரும்பு வளையல்.
கச்சேரா (Kachera) பருத்தி உள்ளாடை.
கிர்பான் (Kirpan) சிறிய வாள்.
குரு கோவிந்த் சிங் அவர்கள் மறைவதற்கு முன்பு தனக்குப் பிறகு மனிதர்கள் யாரும் குருவாக இருக்க மாட்டார்கள் என்றும் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாகிப் (Guru Granth Sahib) தான் இனி வரும் காலங்களில் நிரந்தர குருவாக இருக்கும் என்றும் அறிவித்தார்.
(அ.கோகிலா தேவி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
உடல்நிலை அக்கறை கூட சமூக சேவையே!
வையம்!
சென்னையில் ஊதிய உயர்வு கோரி போராட்டம்: தூய்மைப் பணியாளர்கள் நூற்றுக்கணக்கில் கைது!
தினம் தினம் புதிய உச்சம்... இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்வு... தொடர் அதிர்ச்சியில் மக்கள்!
சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஜன கண மன .. முதன் முதலாக தேசிய கீதம் பாடிய நாள் தெரியுமா?
குரு கோவிந்த் சிங் ஜெயந்தி.. பக்தி கலந்த உற்சாகத்துடன் சீக்கியர்கள் கொண்டாட்டம்
பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்.. அறிவோம்.. உலக அதிசயங்கள்!
{{comments.comment}}