- ஸ்வர்ணலட்சுமி
குருவாயூரப்பன்.. அதாவது விஷ்ணுவின் குழந்தை வடிவமான கிருஷ்ணர். இவரை வழிபடும் இடம் கேரளாவில் உள்ள குருவாயூர் கோவில்.
"குருவாயூர் பத்திரியா" என்பது கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில் முதன்மையாக வழிபடப்படும் விஷ்ணுவின் வடிவமாக இருக்கும் குருவாயூரப்பன். ஆகும்.அவர் கிருஷ்ணரின் குழந்தை வடிவில் வணங்கப்படுகிறார். மற்றும் "குருவாயூர் உன்னி கண்ணன் "என்றும் அழைக்கப்படுகிறார்.
குருவாயூர்- தென்னிந்தியாவின் "துவாரகா "என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய வரலாற்று முக்கியத்துவம் என்னவென்றால் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்கு முன் தேவகி மற்றும் வாசுதேவருக்கு தோன்றியதால் இந்த இடம் தென்னிந்தியாவின் துவாரகா என்று அழைக்கப்படும் பெருமை வாய்ந்தது.

இந்தக் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று பதிவுகள் காட்டுகின்றன. இக்கோவிலில் அமைந்துள்ள விக்கிரகமும் மிகவும் பழமை வாய்ந்தது. கோவில் விக்ரகம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படுகிறது.
காக்கும் கடவுள் 10 அவதாரங்கள் எடுத்தாலும் அதில் அனைவருக்கும் பிடித்த கடவுள் கிருஷ்ண பகவான் ஆவார். பல பின்னணி கதைகள் கொண்ட அவதாரம் கிருஷ்ணன் அவதாரம் ஆகும்.அவர் பிறந்தது முதல் கீதோபதேசம் வரை அவரின் லீலைகள் பல..பல...இவ்வாறு குட்டி கிருஷ்ணராக சில லீலைகளை செய்தவராக கேரளாவில் உள்ள குருவாயூர் கோயிலில் குருவாயூரப்பனாக மக்களுக்கு காட்சி தருகின்றார்.
பெருமாளுக்கு புனித தலங்கள் பல இம்மண்ணில் உண்டு பெரும்பாலும் அந்த தலங்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கும் ஆனால் திவ்ய தேசங்களின் பட்டியலில் இல்லாத ஒரே கோவில் குருவாயூர் கோவில். திவ்யதேசங்கள் பட்டியலில் இல்லாத கோவிலாக இருந்தபோதிலும் இது அனைவரிடத்திலும் பிரபலமான கோவிலாக அமைந்துள்ளது.
நம் மக்கள் அனைவரும் சிறு குழந்தைகளுக்கு சோறு ஊட்ட பெரும்பாலும் இந்த குருவாயூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு சோறு ஊட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள இக்கோவில் உலகப் புகழ் பெற்றதாக விளங்குகிறது.
குருவாயூர் கோயில் ஒரு பாரம்பரியமான கேரள வகை கோயில். கேரள கலை நயத்துடன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.நுழைவு வாயிலில் இருந்து மூலவர் ஆண்டவரை காணலாம். கேரளாவின் மலையாள புத்தாண்டு விசு நன்னாளில் சூரியனின் கதிர்கள் குருவாயூரப்பனின் கால்களை அலங்கரிக்கும். மேலும் கோயிலுக்கு இரண்டு நுழைவாயில்கள் உண்டு.ஒன்று கிழக்கில் இருந்தும் மற்றொன்று மேற்கு பக்கத்திலிருந்தும் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.
குருவாயூரப்பனின் உருவம்: குருவாயூரப்பனின் உருவமானது நான்கு கைகள் கொண்டுள்ளது அவை சங்கு,சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை தன் நான்கு கைகளில் சுமந்து அழகாக மக்களுக்கு காட்சி அளிப்பார்.இந்த சிலையானது பல குணப்படுத்தும் அற்புதமான மருத்துவ பண்புகளைக் கொண்ட பட்டால அஞ்சனாமா என்ற மிக சக்தி வாய்ந்த கல்லால் ஆனது என்று கூறப்படுகிறது.
குருவாயூரப்பனை குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் வழிபடுகின்றனர். இக்கோவில் மண்ணுலகத்தின் பூலோக வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. குருவாயூரப்பன் அனைவருக்கும் நல் வாழ்வு நல் கட்டும்.மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
நிறைவேற்றாத திட்டத்துக்கு எப்படி நிதி தருவது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
கருகிய மலர்.. வாடாத வாசம்.. அவள்.. Burnt flower!
கூட்டணியை விடுங்க...அதிமுக.,விற்கு இரட்டை இலை சின்னம் சிக்கல் இல்லாமல் கிடைக்குமா?
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
தைப்பூசத் திருவிழா.. சென்னிமலையில் கோலாகலம்.. நாளை கொடியேற்றம்
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது: பிரதமர் மோடி பதிவு!
{{comments.comment}}