புவியதனைப்போற்றுவோம்!

Oct 18, 2025,03:29 PM IST
- அ.விசாலாட்சி

புவியும் பெண்ணும் ஒன்றல்லோ!! ஆதலின்
புவியதனைப் போற்றுவோம் !!!!
ஓரடிக்கு சண்டையிட்டு ஆறடிக்கு மண்டியிடுகிறோம் !!

வசந்தமும் வாழ்க்கையும் வஞ்சகமும் கொஞ்சியே....
வாழ்வாங்கு வாழ்ந்த புவியிலே வாடி ....
நிற்குதடா மானிடம்.... வாழவும் நினைக்குதடா!!!! 

கொடும் பகையும் கொள்கையில்லா பற்றும்....
பித்து பிடிக்க வைத்ததடா..இப்புவியில்
மாண்பில்லா மாசும் மண்ணில் பறக்கும் தூசும்
மூச்சை முட்ட வைத்ததடா-மூவுலகிலும்!!!



நெகிழி நெஞ்சை இறுக்குதடா நெருப்புண்ட நஞ்சால்!!!!
நன்னீரும் உந்நீரும் மண்ணீரும் மதியிழந்து நிற்குதடா!!!!
விதைத்த விதையெல்லாம் மூச்சடைத்து மாண்டதடா!!!
 மண்ணை கொஞ்சிய பூச்சிக்கொல்லி தெளிப்பானால்!!!!
அண்ணாந்து பார்த்த மரமெல்லாம் அகால மரணமடா!!!

வான் தரும் தாய்ப்பால் தட்டுப்பாட்டால்!!!!
கால்நடைகளுக்கும் கட்டுப்பாடு
காலார மேய்ச்சலுக்கு!!!!
கட்டு கட்டாய் தீவன தட்டு புண்ணாக்கில்லாமல்!!
இனவிருத்திக்கும் இனக்கட்டுப்பாடு ஊசிவழி மருந்தால் தானடா !!!!
பாக்கெட்டிலும் பால் அடைத்தானடா!!! ரவிக்கையில்லா மாதரால்!!!!
மழை நீரும் மண்ணை முத்தமிட மறுத்ததடா!!!!
தாரும் சிமெண்ட்டும் சாலையில் கொண்ட குடித்தனத்தால் தானடா !!!!
வேர்களும் அசைந்து ஆட்சி செய்ய முடியவில்லையடா!!!!

மண்ணுக்கடியிலும் அரசியலடா !!!!
மண்ணில் புதையுண்ட நெகிழி கார்ப்பரேட் ஆனதால் தானடா !!!!!
கோடியெடுக்கும் புனலிலும் 
காலடி வைக்க முடியவில்லையடா!!
பொங்கி பேரலையாய் வந்த நுரையால் தானடா !!!
சென்ற இடமெல்லாம் செழுமை தந்த பூமியடா!!!
செக்கிழுக்க தெம்பு தந்த வீரமண்ணடா !!!

காணுமிடத்தில் கண்டதெல்லாம் வீசியே வீணாய் போனோமடா!!!
பொறுமை தான் பூமாதேவிக்கு இல்லையடா !!!-அவள் 
பொங்கியெழுமுன் இப்புவியதனை காப்போமடா!!!
பெண்ணும் புவியும் ஒன்று தானடா!!!
இவ்விரண்டையும் போற்றுவோமடா!!!

(கவிஞர் அ.விசாலாட்சி, M.Sc, B.Ed, D.T.Ed படித்தவர். 2005 ஆம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கியவர். ஆசிரியர் என்ற பணியைத் தாண்டி பேச்சாளர், கவிஞர் என்று பன்முக திறன் கொண்டவர். "புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் "6 முறை  இடம் பெற்றவர். கிரஸ்ட் இந்தியா பவுண்டேஷன், தர்மபுரி ஆளுமை மிக்க பெண்களுக்காக வழங்கப்படும் "சிங்கப்பெண் விருது-2025"  விருது பெற்றவர்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயரம்: தவெக அறிவித்த ரூ.20 லட்சம் நிவராணம் 41 குடும்பத்தாரின் வங்கியில் செலுத்தப்பட்டது

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

news

ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

செவிலியர் சிறப்பு!

news

எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை

news

திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

அதிகம் பார்க்கும் செய்திகள்