வாழ்க்கையின் பக்கங்கள்!

Oct 18, 2025,02:00 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


வாழ்க்கையின்  பக்கங்கள் புரளுது 

ஒவ்வொரு  நாளும் புதுசாய் திறக்குது.....

வெண்மையாக இருக்குது 

செம்மையாக மாற்றவே 

உண்ணால் மட்டும் முடியுமே...

உனக்கு மட்டும் சொந்தமே 

நீயே வண்ணம்  தீட்டிடு ...

பிறரை நம்பி தந்தாலே 

பக்கம் கசங்கிப் போகுமே ...

வரலாறு  வாசிக்க மறுக்குமே 

உலகம் நேசிக்க  மறக்குமே  

இன்று என்பது உண்மையே 

நாளை  என்பது எதிர்பார்ப்பே 

எதிர்வரும் காலங்கள் ரகசியமே 

தினமும் நமக்கு பிறப்புதான் 

இன்றுபிறந்தோம் என்றுதான் 




தினமும் தோன்ற வேண்டும்தான் 

பக்கம் எல்லாம் வண்ணமயம் 

ஆக்க வேண்டும்தான்...

தன்னம்பிக்கை ஒன்றுதான் 

உன்னை ஏற்றும் ஏணிதான் ..

தாழ்வுமனப்பான்மை கொள்ளாதே

உன்னை வீழ்த்தும் ஆயுதம்தான் ...

அன்றன்றய கடமையை அன்றே முடித்திடு...

என்ன விநோத வாழ்க்கையோ...!!!

ஒவ்வொரு நாளும் மாறுது 

இன்ப துன்பம் சுழலுது..

சண்டை சச்சரவு நடக்குது 

வாதம் விவாதம் அனலாகுது 

உறவுகள் மனஸ்தாபம் கொள்ளுது 

எதிரி கூட நண்பன் ஆகிறான் 

நிலையில்லா வாழ்விலே 

நிலைக்கும் இந்த மாற்றங்கள் ...!!!

குறுகிய மனப்பான்மை தூண்டும் சுயநலம்

துன்பம் அனைத்திற்கும் அடித்தளம் ..!!

மனதை விசாலம் ஆக்கிடு 

இயல்பாய் நீயும் வாழ்ந்திடு ...!!!

குற்றம் குறைகள் காணாதே 

நிறைகள்  மட்டும் கண்டிடு 

சுற்றம் சூழ வாழ்ந்திடு ...!!!

வாழ்க்கையின் பக்கங்கள் எழுதிடு 

இன்பமையைக் கொண்டுதான் ....!!!

இசையாய் நீயும் ரசித்திடவே 

இனிமையாய் இதழ்கள் இசைத்திடவே

செவிகள் விரும்பி கேட்டிடவே ....!!!!

வாசிக்க  வாசிக்க இன்பம்தான் 

நேசிக்க நேசிக்க சொர்க்கம்தான் 

வாழ்க்கை என்னும் தேரும்தான் 

வீரவாகை சூடும்தான்....!!!

தங்க ரதத்தில் வாழ்க்கைதான் 

உலகம் உனக்கு வீதிதான் 

உலாவந்திடலாம் தினமும்தான்...!!!

ஏனோ மனிதன் உணரல 

பூமி வாடகைவீடுதான் 

எதற்கு இத்தனை ஆட்டம்தான் 

எவ்வாறு பிறந்தோம் 

அவ்வாறுதான் சென்றுசேர வேண்டும்தான்...

பிறப்பு இறப்புக்கு இடையிலே 

எத்தனை வேடம் நமக்குத்தான் 

எல்லா வேடமும் நம் வாழ்க்கை 

புத்தகம் ஏந்துமே....!!!

வாழ்க்கையின் பக்கங்கள் புரளுது 

வரலாறு ஆகப் பார்க்குது...!!!


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஸ்டாலின் 2...இபிஎஸ் 5...போட்டி போட்டு தேர்தல் வாக்குறுதிகள் அள்ளி வீசும் திமுக-அதிமுக

news

பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது தான் திமுகவின் வழக்கம்: அண்ணாமலை

news

திமுக-அதிமுக.,வின் தேர்தல் வாக்குறுதிகள்...என்ன செய்ய போகிறார் விஜய்?

news

அதிமுக-திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள் சாத்தியமா?...வாங்க தூர்வாரலாம்

news

பூம்பூம் மாடு வளர்ப்பவர்களுடன் 'காணும் பொங்கல்' கொண்டாடிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

news

ஊழல் செய்தால் பணி மாற்றம் இல்லை, பணி நீக்கம் செய்ய வேண்டும்: சீமான் ஆவேசம்!

news

வீரர்களின் கனவு நனவானது... ஜல்லிக்கட்டை தூக்கி சாப்பிட்ட முதலவர் முக ஸ்டாலினின் 2 அறிவிப்புக்கள்!

news

சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு வேலை...முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பெண்களுக்கு ரூ.2,000 உரிமைத்தொகை... ஆண்களுக்கு இலவச பஸ் பயணம்...இபிஎஸ் அதிரடி அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்