நாளை அனுமன் ஜெயந்தி 2025...அனுமன் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

Dec 18, 2025,10:51 AM IST

அனுமன் ஜெயந்தி பற்றிய சிறப்புகள்:

 விசுவா வசு வருடம் 20 25 டிசம்பர் மாதம் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை,மார்கழி மாதம் 4 ஆம் தேதி அமாவாசையுடன்,மூலம் நட்சத்திரம் சேர்ந்த நன்னாளில் "அனுமன் ஜெயந்தி" விழா கொண்டாடப்படுகிறது.


 "அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி 

 அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி 

 அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கை கண்டயலார் ஊரில் 

 அஞ்சிலே ஒன்றை வைத்தான் 

 அவன் நம்மை அளித்து காப்பான்."



 

ராமாயணத்தில் ராமருக்கு அடுத்தபடியாக பக்தர்களால் கொண்டாடப்படும் கடவுள் அனுமன். ராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் நிச்சயம் இருப்பார்.

 நேரம்: டிசம்பர் 19,20 25 வெள்ளிக்கிழமை அமாவாசை திதி காலை 

4: 59 மணிக்கு தொடங்கி டிசம்பர் 20 சனிக்கிழமை காலை 7 :12 வரை உள்ளது. மூலம் நட்சத்திரம் இணையும் இந்நாளில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மார்கழி மாதம் அனுமன் ஜெயந்தி அனுஷ்டிக்கப்படுகிறது.

 ஆனால் பல வட இந்திய மாநிலங்களில் சித்திரை மாதத்தில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் மார்கழி மாத அமாவாசை நாளில் அனுமன் ஜெயந்தி விழா அனைத்து ஆஞ்சநேயர் ஆலயங்களிலும்,  ராமாலயங்களிலும்  அனுஷ்டிக்கப்படுகிறது .

 அனுமனின் வாலில் நவகிரகங்கள் ஐக்கியமாகி இருப்பதால் அவரது வாலில் பொட்டு வைத்து வழிபட்டால் நவகிரகங்களின் தோஷம் விலகும் என்பது ஐதீகம்.


 அனுமன் அவதரித்ததை பற்றிய சிறு தகவல் :

 இராமாயணத்தில் ராவணனை அழிப்பதற்காக  மகாவிஷ்ணு, ராமராக அவதாரம் செய்தார். ராமருக்கு உதவ தேவர்கள் பலர் பல சக்திகளை கொடுத்து உதவினர். அதேவேளை கேசரி என்கிற வானர அரசனும், அவர் மனைவி அஞ்சனை தேவியும் கிஷ்கிந்தை வனப்பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை வேண்டி தவம் செய்தனர். சிவபெருமான் தன்னுடைய சக்தியை வாயு பகவானிடம் கொடுத்து, அஞ்சனைதேவியிடம் சேர்க்கும்படி கூறினார். அவரும் அவ்வாறே செய்தார். அனுமன் அவதரித்தார். ராமருக்கு உதவுவதற்காக மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் இணையும் நாளில் அஞ்சனை மைந்தனாக அனுமன் அவதரித்தார். எனவே, ஆஞ்சநேயரை வழிபடுவதனால் சிவபெருமானையும், பெருமாளையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.


 அனுமன் ஜெயந்தி அன்று அவரை மனதார வழிபட நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் துன்பங்கள் விலகும். சகல மங்கலங்களும் வந்து சேரும் என்று கூறுவார்கள்.


 ராமாயணத்தில்  சீதையை மீட்கும் முயற்சியில் இருந்த ராமனுக்கு சேவகனாக, தூதுவனாக இருந்தவர் அனுமார். சீதாதேவி சூடாமணியை ராமரிடம் சேர்க்குமாறு அனுமனிடம் கொடுத்தார். ராமரும்,சீதாவும் சேர்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் அனுமன். ஆகையால் அனுமனை வழிபாடு செய்வதனால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்றும்,கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும், ஆனந்தமான வாழ்க்கை அமையும் என்று கூறுவார்கள்.


 அனுமன் ஜெயந்தி அன்று வைக்கப்படும் நைவேத்திய பொருட்களுக்கும் என்னென்ன பலன்கள் என்று பார்ப்போமா...

 ஆஞ்சநேயர் ஜெயந்தியில் அவருக்கு பிடித்தமான நைவேத்திய  பொருட்களை படைத்து வழிபடுவது அனைவருக்கும் சிறப்பான பலன்களை அளிப்பார்.


 அனுமன் ஜெயந்தி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து அனுமன் படத்திற்கு சிவப்பு நிற மலர்கள் சூடி அவருக்கு விருப்பமான உணவுப் பொருட்களை படைத்து, நெய் விளக்கேற்றி, அனுமனுக்குரிய பாடல்கள், ராமாயணத்தில் சுந்தரகாண்டம், அனுமன் சாலிசா போன்றவற்றை படித்து வழிபாடுகள் செய்வது சிறப்பு.

 அனுமன் என்றாலே அவருக்கு சிறப்பான நைவேத்தியம்  வடைமாலை தான். வடைமாலை சாற்றி 

வழிபட துன்பங்கள் அனைத்தும் நீங்கும்.

 செந்தூரம் -அறிவும் ஆற்றலும், தைரியம் பெருகும்.

 மல்லிகை மலர்கள் சாற்றி வழிபட கெட்ட சக்திகள் விலகும் என்று கூறுவார்கள்.

 வெற்றிலை மாலை- அனுமனுக்கு அணிவிப்பது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேற்றி வைப்பார்.

 சந்தனம் -மங்களகரமான வாழ்க்கை அமையும்.

 வெண்ணை -சாற்றி வழிபாடுகள் செய்ய வெண்ணை கரைவது போல் துன்பங்கள் கரையும் என்பது ஐதீகம்.

 அனுமனை மனதார நினைத்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சியும், புண்ணியமும் வந்து சேரும். 


 ஜெய் ஹனுமான்!

 ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய் ஜெய் ராம் ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்!


 மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். தென்தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மக்களை காக்க குரல் கொடுக்கச் சொன்னால், டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுகிறார்:முதல்வர் முக ஸ்டாலின்

news

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்றுக் கிடக்கும் உயர்கல்வித்துறை; நயினார் நாகேந்திரன்

news

தீயசக்தி திமுக.,விற்கும் தவெக.,விற்கும் தான் போட்டி...ஈரோட்டில் விஜய் மாஸ் பேச்சு

news

மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் 23ம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!

news

அதிமுக பெயரை கூட சொல்லவில்லை...மேடம் ஜெயலலிதா...முதல் முதலாக பாராட்டிய விஜய்

news

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி தான் உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

கடும் அமளிக்கு இடையே 100 நாள் வேலை திட்ட பெயர் மாற்ற மசோதா நிறைவேறியது

news

விபத்தில் சிக்கிய தவெக.,வினர்...பைக் மோதி 10 பேர் காயம்

அதிகம் பார்க்கும் செய்திகள்