சென்னை: இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு காலத்தில் கலக்கி வந்த ஸ்பின் பவுலர் ஹர்பஜன் சிங் மற்றும் நடிகை ஓவியா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சேவியர். இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதல் முதலில் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்திய கிரிக்கெட்டின் மூலம் ஹர்பஜன் சிங் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றதால் இப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. தொடர்ந்து டிக்கிலோனா என்ற படத்தில் கேமியோ கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருந்தார். இதற்கிடையே தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் தான் நடிகை ஓவியா. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் உலகம் முழுவதும் பரிச்சயமானார். தொடர்ந்து மதயானை கூட்டம், சிலுக்குவார் பட்டி, காஞ்சனா 2, மெரினா, கலகலப்பு, களவாணி 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென்ற தனி இடம் பிடித்தவர். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது சம்பவம், ராஜ பீமா என இரண்டு படங்கள் கைவசம் உள்ளது.
இந்த நிலையில் சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழில் சேவியர் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக கமிட்டாகி உள்ளார் ஹர்பஜன்சிங். இப்படத்தில் டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ஜோடி சேர்ந்துள்ளார் பிக் பாஸ் புகழ் ஓவியா. இவர் வர்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் ஜி பி முத்து, விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களின் போஸ்டர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஒரு மருத்துவமனையில் நிகழும் திரில்லரான, நகைச்சுவை கலந்த கலாட்டாவுடன் திருப்புங்கள் நிறைந்த திரைக்கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை ஷான்டோவா ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ஜான் பால்ராஜ் தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஜிஎம் உதயகுமார் இசையமைக்க, மாணிக் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் கதாபாத்திரங்கள் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு சோசியல் மீடியாவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.
ஹர்பஜன் சிங் எப்போதுமே தமிழ் மீது உள்ள பற்றுதல் காரணமாக, அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் ரசிகர்களுக்கு தமிழிலேயே பதிவிட்டு வருவார் என்பது நினைவிருக்கலாம். அந்த வரிசையில் தற்போது ஹர்பஜன் சிங் தனது எக்ஸ் தளத்தில் தமிழ் ரசிகர்களுக்கு வணக்கம்.தான் தமிழில் அடுத்து நடிக்க இருக்கும் படம் சேவியர். இது உங்களை மகிழ்விக்க வருகிறது. உங்களின் அன்புக்காக வெயிட்டிங் என பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
முதல்வர் ஸ்டாலினைப் பாராட்டிய டாக்டர் ராமதாஸ்...திமுக பக்கம் செல்ல திட்டமா?
என் இதயத்தில் கலந்த தோழியே.. நன்றி!
மந்த்ராலயம் என்றொரு மகானுபவம்.. The Divine Odyssey to Mantralayam: A Spiritual Quest
தேமுதிக யாருடன் கூட்டணி? இன்று இரவு 7 மணிக்கு அறிவிக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு நாளை 'ஆரஞ்சு அலர்ட்': வானிலை மையம் எச்சரிக்கை
கூட்டுக் குடும்பமா.. இல்லை நியூக்ளியார் குடும்பமா.. Nuclear Family vs Joint Family!
மாறிப் போன வாழ்க்கை.. கடந்து போன வயது.. It changed my life
கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
{{comments.comment}}