2 பேராசிரியைகளின் தூண்டுதலின் பேரில் பொய்ப் புகார்.. ஹரிபத்மன் மனைவி பரபரப்பு புகார்

Apr 06, 2023,09:30 AM IST
சென்னை: கலாஷேத்ராவைச் சேர்ந்த 2 பெண் பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரில், எனது கணவர் ஹரி பத்மன் மீது முன்னாள் மாணவி பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார். இதுகுறித்து மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உதவிப் பேராசிரியர் ஹரி பத்மனின் மனைவி திவ்யா சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கலாஷேத்திரா பவுண்டேஷன் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரியில் படித்து வரும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகொடுக்கப்படுவதாக கூறி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த போராட்டத்தைத் தொடர்ந்து முன்னாள் மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக புகார் கொடுத்தார். அதன் பேரில் உதவிப் பேராசிரியர் ஹரி பத்மன் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், ஆசிரியர்கள் சஞ்சித் லால், சாய் கிருஷ்ணன், ஸ்ரீநாத் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்படுவர் என்று கலாஷேத்திரா நிறுவனம் அறிவித்தது. 

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஹரி பத்மனின் மனைவி திவ்யா சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு பரபரப்புப் புகார் கூறியுள்ளார்.அதில், எனது கணவர் அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் நிலையில் இருந்ததால் அவரை வளர விடக் கூடாது என்று பேராசிரியர்கள் நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் ஆகியோர் தொடர்ந்து சதி செய்து வந்தனர். அவர்களது தூண்டுதலின் பேரில்தான் முன்னாள் மாணவி மூலம் பொய்யான புகாரைக் கொடுத்துள்ளனர்.

புகார் கொடுத்த முன்னாள் மாணவி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே படிப்பை முடித்து விட்டு கனடாவுக்குப் போய் விட்டார். அவர் கனடா செல்வதற்கு முன்பு எங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போனார். 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் எங்களது குடும்ப நிகழ்ச்சியிலும் கூட அவர் மகிழ்ச்சியாக கலந்து கொள்ளவும் செய்தார்.

முன்னாள் மாணவி கொடுத்துள்ளது பொய்யான புகாராகும். இந்த விவகாரம் குறித்து மூத்த பெண் காவல்துறை அதிகாரிகளைக் கொண்டு உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும்.  எனது கணவர் போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளார். அவர் தப்பிச் செல்ல முயலவில்லை. கும்பல் தாக்குதல் நடந்து விடாமல் தவிர்க்கும் வகையில்தான் அவர் எங்களது குடும்ப நண்பர் வீட்டில் தங்கியிருந்தார் என்று திவ்யா அதில் கூறியுள்ளார்.

இந்தப் புகார் தற்போது அடையார் துணை காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஹரிபத்மன் மனைவி கொடுத்துள்ள புகாரை தற்போது போலீஸார் விசாரிக்கவுள்ளனர். கலாஷேத்திரா விவகாரம் வேறு வேறு ரூபத்தில் திரும்பி வருவது மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்ட வழக்கு: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

news

ரெஸ்ட் ரூம் போனால் கூட இனி சொல்லிட்டுத்தான் போகணும் போல.. எடப்பாடி பழனிச்சாமி கோபம்

news

சென்னையில் மாலையில் கலக்கிய மழை...அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அலர்ட்!

news

சாராயம் விற்ற பணத்தில் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்துள்ளது: அண்ணாமலை

news

டெல்லி சந்திப்பின்போது.. எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவிடம் சொன்ன.. "அந்த" 2 விஷயங்கள்!

news

பீகாரில் மட்டுமல்ல கர்நாடகாவிலும் ஓட்டு திருட்டு : ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு

news

பீகார் சட்டசபைத் தேர்தல்.. கலர் போட்டோ, கொட்டை எழுத்துகளில் புதிய EVM.. கலகலக்கும் களம்!

news

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

news

துளசி.. திருமாலுக்கு உகந்தது.. ஏன் என்று தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்