டில்லி : அரியானா மாநிலத்தின் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. இதில் காலை முதலே மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருவதால் வெற்றி யாருக்கு, ஆட்சியை பிடிக்க போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது.
அரியானா மாநில சட்டசபையில் மொத்தமுள்ள 90 இடங்களுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடந்து வருகிறது. மொத்தம் 20,632 ஓட்டுச்சாவடிகள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன. 2,03,54,350 வாக்காளர்கள் இந்த தேர்தலில் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 1.07 கோடி பேர், பெண் வாக்காளர்கள் 95 லட்சம். மூன்றாம் பாலினத்தவர்கள் 467 பேர். இவர்களில் 8821 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் அக்டோபர் 08ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

2019 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அரியானா சட்டசபை தேர்தலில் பாஜக, ஜனநாய ஜனதா கட்சியுடன் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைத்தது. தற்போது பாஜக ஆட்சி நடந்து வரும் அரியானாவில் மவோகர் லால் கட்டார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த முறையும் அரியானா தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதனால் இந்த முறையும் பாஜக வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை பிடிக்குமா? அல்லது 10 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? அடுத்த முதல்வர் யார் என்பது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
கடந்த முறை பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும், ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜக இந்த முறை 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்து வந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்றோ அக்கட்சி கூறி வருகிறது. அதே போல், மக்கள் 10 ஆண்டுகளாக ஊழல் ஆட்சியை கண்டு சோர்வடைந்து விட்டார்கள். விவசாயிகள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த முறை தங்கள் கட்சி நிச்சயம் ஆட்சியை பிடிக்கும் காங்கிரசும் தீவிரமாக நம்பிக்கை தெரிவித்து வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!
தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!
முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு
மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை
தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?
"2027 உலகக் கோப்பையே எனது கடைசி ஆட்டம்" – விராட் கோலி நெகிழ்ச்சி
இத்தாலியில் பள்ளி மாணவிகள் புர்கா அணிய தடை: அமைச்சரவை ஒப்புதல்
சினிமா படப்பிடிப்புக்கான அனுமதியை இனி ஆன்லைனில் பெறலாம்: தமிழக அரசு அறிவிப்பு
{{comments.comment}}