எந்த நேரத்தில் எந்த பழத்தை சாப்பிடலாம்..  எதை சாப்பிடக் கூடாது!

Sep 02, 2023,04:10 PM IST
- மீனா

சென்னை: "ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம், தர்பூசணி பழம்"

பழக்கார அம்மாவின் சத்தம் கேட்டதும், பாப்பாவுக்கு  குஷியாகி விட்டது..  

"ஹை ஜாலி, அம்மா எனக்கு திராட்சை பழம் சாப்பிடணும் போல இருக்கு வாங்கி தாங்கம்மா"


"சரி இருடா, வீட்டு கிட்ட வரட்டும் வந்தவுடனே வாங்கலாம்"

வீட்டு வாசலுக்கே வந்து விட்ட பழக்கார அம்மா, அம்மா, ஆப்பிள் ஆரஞ்சு திராட்சை பழமெல்லாம் கொண்டு வந்திருக்கேன்மா வேணுமா என்று குரல் கொடுத்தார்..

"பழமெல்லாம் என்ன விலை?"

"ஆப்பிள் ஒரு கிலோ 250 ரூபாய், திராட்சை கிலோ 200 ரூபாய்"

"என்னமா! எல்லாமே அதிக விலையா இருக்குதே திராட்சையை போயி 200 ரூபாய் சொல்றீங்க"

"என்னமா பண்றது எல்லாம் விலைவாசியும் கூடிப்போச்சுல்ல. இப்போல்லாம் எல்லாருமே பழங்கள் வாங்க ஆரம்பிச்சிட்டாங்கல்ல, அதனாலயும் ரொம்ப கிராக்கியாக  தான் இருக்குது"

"சரி ஆப்பிள் மட்டும் கொடுங்க போதும்"

இடையில் நுழைந்த பாப்பா .. "அம்மா எனக்கு  கிரேப்ஸ் வேணும்" என்று அணத்தினாள்.

"இப்ப ஆப்பிள் சாப்பிடு அடுத்து வரும்போது கிரேப்ஸ் வாங்கிக்கலாம்"

"ஏம்மா பிள்ளை கேட்குதுல்ல வாங்கி கொடு நான் விலையவேனா குறைச்சு தரேன். இந்தா சாமி சாப்பிடு"

"டேய் இருடா இப்பதான் எழுந்துருச்சே, வெறும் வயிற்றில் கிரேப்ஸ் சாப்பிடக்கூடாது"




"என்னம்மா , பழம் தானே ஏன் சாப்பிட கூடாதுன்னு சொல்ற"

உண்மை தாங்க.. வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.  என்னதான்  பழங்களில் நிறைய சத்துக்கள் இருந்தாலும் சில பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் அது நமக்கு பிரச்சனையாக தான் முடியும். உதாரணமாக கிரேப்ஸ், ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி ,சாத்துக்குடி போன்ற பழங்களை சொல்லலாம்.  

இந்த பழங்களை நாம் வெறும் வயிற்றில் சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் இரைப்பை பிரச்சனை போன்றவை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. காலையில தர்பூசணி பழம் ,பப்பாளிப்பழம், வாழைப்பழம் போன்ற பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பொதுவாக சாப்பிடுவதற்கு முன்பும் சாப்பிட்ட பின்பும் பழங்கள் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. 

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாகவும், அல்லது சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்கு பின்பும் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக காலை நேரத்தில் நாம் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்வது தான் மிகவும் சிறந்தது . ஆனாலும் வெறும் வயிற்றில் இருக்கும் போது சில பழங்களை தவிர்ப்பதே நல்லது. மத்தியான நேரங்களில் நாம் எல்லா வகையான பழங்களையும் கூட எடுத்துக் கொள்ளலாம். இரவு நேரங்களில் தர்பூசணி கிரேப்ஸ் ஆரஞ்சு போன்ற குளிர்ச்சியான பழங்களை சாப்பிடாமல் இருப்பது தான் நல்லது. 

சொல்லச் சொல்ல பிள்ளைக்கு மட்டுமல்ல.. அந்த பழக்கார அம்மாவுக்கும் கூட ஆச்சரியமாகப் போய் விட்டது.. நீ சொன்ன இந்த நல்ல விஷயத்தை என்னிடம் பழம் வாங்குறவங்களுக்கும் நான் சொல்றேன் என்று கூறி கிளம்பிச் சென்றார்.

என்ன மக்களே.. நீங்களும் கூட இதை பாலோ பண்ணலாமே!

சமீபத்திய செய்திகள்

news

Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

news

2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

news

வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

news

விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு

news

ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

news

இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!

news

மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

news

ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்

news

தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்

அதிகம் பார்க்கும் செய்திகள்