-ஸ்வர்ணலட்சுமி
பச்சை கொண்டை கடலை:( green chickpeas) கிரீன் சிக் பீஸ். "ஹராசன்னா "என்று ஹிந்தியில் அழைக்கப்படும் பச்சை கொண்டை கடலை பற்றி அறிந்து கொள்வோம். பொதுவாக கொண்டைக்கடலை நாம் அனைவரும் அறிந்ததே .அதிலும் பிரவுன் கலர் கொண்டைக்கடலை பெரும்பாலான வீடுகளில் சமைப்போம் . ஆனால் இந்த பதிவில் பச்சை கொண்டை கடலை பற்றிய தகவல்களை பார்ப்போம். இந்த பச்சை கொண்டைக்கடலை முதிர்ச்சி அடையாத இளம் கொண்டைக்கடலை ஆகும். இது முதிர்ந்து முழுமையாக முதிர்ச்சி அடைந்து உலர்வதற்கு முன்பே அறுவடை செய்யப்படும் .பிற கொண்டை கடலையுடன் ஒப்பிடும் பொழுது பிரகாசமான பச்சை நிறம் இனிப்பு சுவையுடன் கூடிய மென்மையான அமைப்பு கொண்டவை இந்த பச்சை கொண்டைக்கடலை. இது மிகவும் ஆரோக்கியமான உணவு .அதிக நார்ச்சத்து, புரதம் ,வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, எனவே பச்சைக் கொண்டைக்கடலை நாம் உணவில் உட்கொள்வதனால் பல நன்மைகள் ஏற்படுகிறது.
பயன்பாடுகள் :பச்சை கொண்டை கடலை ஊறவைத்து அதனை குக்கரில் வேகவைத்து சுண்டல் செய்து சாப்பிடலாம் ,அல்லது குழம்பு வைத்து சாப்பிடலாம் ,சப்பாத்திக்கு குருமா போன்று செய்தும் சாப்பிடலாம் ,காய்கறி சாலடுகளுடன் சாப்பிட நல்ல பில்லிங்கான ஹெல்தியான உணவாக இருக்கும்.
பச்சைச் சன்னா வேகவைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது, மேலும் முளைகட்டி வேகவைத்து சாப்பிடலாம்.

1.நார்ச்சத்து பச்சை கொண்டை கடலையில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கலை தடுக்கிறது.
2. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும் :இதில் குறைந்த கிளைசிமிக் குறியீடு இருப்பதினால் டயாபடீஸ் நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
3. எலும்பு வலுப்பெறும்: பச்சை கொண்டை கடலை -கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இது எலும்பு மற்றும் பற்களை பராமரிக்க பெரிதும் உதவி புரிகிறது.
4. நோய் எதிர்ப்பு சக்தி: பச்சை சன்னாவில் வைட்டமின் சி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.5. இதய ஆரோக்கியம்: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குறைந்த கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் இருப்பதனால் இதனை வேக வைத்து உட்கொள்ளும் பொழுது இதய ஆரோக்கியம் மேம்படும்.
5. சரும ஆரோக்கியம்: பச்சை சன்னாவில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
வேலைக்கு செல்பவர்கள், மற்றும் பள்ளி ,கல்லூரிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பச்சை சன்னா சமைத்து லஞ்ச் பாக்ஸுக்கு பேக் செய்து கொடுக்கலாம்.
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கும், ரெசிபிகளுக்கும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் . டேஸ்ட்டான பச்சை சன்னா ரெசிபி அடுத்த பதிவில் வெளிவரும் .உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}