சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவிற்கு படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பொழிந்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். குற்றாலத்தில் தொடர் மழை பெய்ததினால் அங்குள்ள அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12ம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் வருகிற 14-ம் தேதி வரை ஒரு சில இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
சென்னையில் இடி மின்னல் மழை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒன்றியம் இருக்கக்கூடும்
தமிழக கடலோரப்பகுதிகள்:
மன்னர் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று முதல் ஜூன் 14ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து.. சென்னையில் நாளை பேரணி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போர்ச் சூழல் எதிரொலி.. ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தம் - பிசிசிஐ
திருச்சிக்கான புதிய பேருந்து நிலையம்.. பஞ்சப்பூரில் பிரம்மாண்டம்.. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
No Live coverage: மீடியாக்களே உணர்ச்சிவசப்படாதீங்க.. அடக்கி வாசிங்க.. மத்திய அரசு கோரிக்கை
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை தடுத்து அழித்த இந்தியா... வியாழக்கிழமை இரவு நடந்தது என்ன?
அதிரடித் தாக்குதலில் குதித்த இந்தியா.. பதட்டத்தில் பாகிஸ்தான்.. PSL 2025.. யூஏஇக்கு மாற்றம்!
மக்களே வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சண்டிகரில் எச்சரிக்கை சைரன்!
மதுரையில் கம்பீரமாக வலம் வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரோட்டம்..உணர்ச்சி வெள்ளத்தில் பக்தர்கள்
கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் ஆக தேர்வு செய்யப்பட்டார்.. ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்!