தமிழ்நாடு முழுவதும்.. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும்.. வானிலை மையம்

May 03, 2023,11:39 AM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அடுத்த 3 நாட்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு இன்று வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல்,திருப்பூர், தென்காசி, விருதுநகர், சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, அரியலூர், வேலூர், திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர், காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, புதுக்கோட்டை  ஆகிய மாவட்டங்களில்  மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கன மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலின் தென் கிழக்குப் பகுதியில்,  மே 6ம் தேதி காற்றழுத்தம் ஏற்படும் என்றும் அது மே 7  அல்லது 8ம் தேதி தாழ்வு நிலையாக மாறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் கடலில் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்