Rain update: தமிழ்நாட்டில்.. பல இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு!

May 21, 2024,06:49 PM IST

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த நான்கு நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது தவிர கேரளாவில் இன்றும், நாளையும் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். நாளை மறுநாள் மிக கனமழைக்கும், அடுத்த இரண்டு நாட்கள் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.


கர்நாடகாவை பொறுத்தவரை, இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.




தென்மேற்கு பருவ மழை தமிழ்நாடு முழுவதும் நல்ல மழையை பொழிவித்து வருகிறது. நாளை தென்மேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த  காற்றழுத்த தாழ்வு பகுதி மே 24ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். பின்னர் வட கிழக்கு நோக்கி நகர்ந்து ஒடிசா பகுதியில்  நல்ல மழை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், மே 25ஆம் தேதி தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக மே 23 மற்றும் 24 தேதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில் நேற்று முதல் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன முதல் மிக கனமழை  கொட்டி தீர்த்ததுள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை வெளுத்து வாங்கியுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் புது சத்திரத்தில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. 


நாமக்கல் நகரில் 12 சென்டிமீட்டர் மழையும், சேந்தமங்கலம் 10.5 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரத்தில் 10.3 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. எருமப்பட்டியில் 7.4 செமீ, குமாரபாளையத்தில் 6.5 செமீ , திருச்செங்கோட்டில் 5 சென்டிமீட்டர் மழை மங்களபுரத்தில்  3.7 சென்டிமீட்டர் மழை பதிவானது.

சமீபத்திய செய்திகள்

news

ஏகப்பட்ட பிரச்சினை: சுறுசுறுப்பு காட்டும் தமிழக அரசியல் கட்சிகள்.. அடுத்தடுத்து போராட்டம் அறிவிப்பு

news

ஆண் மகனை அவனாகவே வாழ விடுங்கள்!

news

நாகர்கோவில் சிறையில் கைதி கொலை: CBCID விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு!

news

முதல்வரை மிரட்டிய வழக்கு: திமுக எம்எல்ஏ மார்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி!

news

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

news

நீட் தேர்வு போராட்டம்.. இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகிறது திமுக.. மு.க.ஸ்டாலின்

news

ராகுல் காந்தி கைது வன்மையாக கண்டிக்கத்தக்கது.. முதல்வர் விஜய் கண்டனம்

news

போதையில் கார் ஓட்டிய வழக்கு: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னருக்கு சிறை தண்டனையா?

news

முடிவுக்கு வந்தது பாமக விவகாரம்...அன்புமணிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற ராமதாஸ்

அதிகம் பார்க்கும் செய்திகள்