தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை.. 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Nov 04, 2023,07:26 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சூடு பிடித்துள்ளது. இன்று தமிழ்நாட்டிலும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மிக மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தென் தமிழ்நாடு, மத்திய தமிழ்நாடு, கடலோர மாவட்டங்களில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.


குறிப்பாக மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல டெல் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்கோடி, நெல்லை, குமரியிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.




கனமழை எதிரொலியாக தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, மதுரை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல, மயிலாடுதுறை  மாவட்டத்தில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


தலைநகர் சென்னையிலும் அதிகாலையிலிருந்து கன மழை பெய்து வருவதால் சென்னை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

அதிகம் பார்க்கும் செய்திகள்