சென்னை: சென்னை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் பெய்து வருகிறது. மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இன்னும் முழுமையாக புயல் தாக்கத்திலிருந்து மக்கள் வெளியே வராத நிலையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை மையம்.
10 நாள் இடைவெளி விட்டு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில்
அடுத்த மூன்று மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை,நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
நாளை மழை பெய்யும் மாவட்டங்கள்
தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை டிசம்பர் 17ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், விழுப்புரம், தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்கள், டெல்டாவில் 2 நாட்களுக்கு கன மழை உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளது வானிலை மையம்.
அமைச்சர் உறுதிமொழியை ஏற்று.. இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
யாரையும் ஜெயிக்க வைக்க நான் வரலை.. நான் ஜெயிக்க வந்திருக்கேன்.. விஜய் அதிரடி
ஆசிரியர்களை பழி வாங்குவது திமுக அரசின் சர்வாதிகாரப் போக்கு தான் காரணம்: அண்ணாமலை
கூட்டணி குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேட்டி
வெள்ளி விலை ஒரே நாளில் இருமுறை வீழ்ச்சி: என்ன நடந்தது?
தங்கம் விலை நேற்றைய விலையைத் தொடர்ந்து இன்றும் குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
பாமக வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்...கட்சிப் பிளவுக்கு மத்தியில் ராமதாஸ் அதிரடி
கர்நாடகாவின் பிரபலமான ரியல் எஸ்டேட் அதிபர் சி.ஜே. ராய் எடுத்த விபரீத முடிவு!
மத்திய பட்ஜெட் 2026: எந்தெந்த பொருட்களின் விலை குறையும், எவற்றில் விலை அதிகரிக்கும்?
{{comments.comment}}