சென்னை: தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்தாம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் நேற்று அதிகபட்சமாக கோவை, மாக்கினாம்பட்டி, தூத்துக்குடி, காயல்பட்டினம், போன்ற பகுதிகளில் தலா 10 cm மழை கொட்டி தீர்த்தது. தங்கச்சிமடம், ஆலங்குடி, மூலைக்கரைப்பட்டி, கழுகுமலையில் தலா 8 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. ஓட்டப்பிடாரம், வடக்குத்து, கயத்தாறு, செந்துறையில் தலா 7 சென்டிமீட்டர் மழையும், பொள்ளாச்சி, சிவகிரி, ராதாபுரத்தில் தலா ஆறு சென்டிமீட்டர் கனமழையும் பெய்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
இன்று கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர் ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், ஆகிய மாவட்டங்களில் 17 இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
கோவை மலைப் பகுதிகள் , நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
மனிதா நீ மட்டும் ஏன் இன்னும் களிமண்ணாய்..!
பொம்மிக்குட்டி.. ஒரு நிமிடக் கதை (23)
விரதம் என்னும் பயிற்சி
அன்பான “கூகுள் டிரான்ஸ்லேட் குடும்பத்தினர்” மற்றும் ஜூனூன் தமிழ் ரசிகர்களே!
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்து அருளி - சிவபுராணம் (தொடர்ச்சி)
சமையல் With ஸ்வர்ணா: கருப்பு உளுந்து (Black urad dal ) + மல்லி சட்னி!
பன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள்.. புரிந்து கொள்ளவும், ஒன்றிணைக்கவும் உதவும் பாலம்!
மகா கந்த சஷ்டி விரதம் 2026: முருகனே செந்தில் முதல்வனே.. மாயோன் மருகனே!
கடல் ஒரு கவிதை!
{{comments.comment}}