சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை கொட்டி தீர்த்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் ஐந்தாவது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று ஒரு நாள் மட்டும் உதகை, குந்தா, கூடலூர், மற்றும் பந்தலூர், ஆகிய நான்கு தாலுகாவுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் முதுமலை புலிகள் காப்பகத்திலும் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. தெப்பக்காடு பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட்டு வந்த வாகன சவாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் யாரும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு வரவேண்டாம் என நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் விட்டுவிட்டு பெய்யும் தொடர் கனமழை எதிரொலியாக முதுமலை புலிகள் காப்பகம் மூன்று நாட்கள் மூடப்படும் தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது ஏழு முதல் 11 சென்டிமீட்டர் வரையிலான கன மழை பெய்ய கூடும் என்பதால் தமிழ்நாட்டிற்கு இன்று எல்லோ அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர் ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 10.4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக அவலாஞ்சியில் மட்டும் கடந்த ஐந்து நாட்களாக 142 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.
அப்பர் பவானியில் 7. 7 சென்டிமீட்டர், மேல்கூடலூர் மற்றும் நடுவட்டத்தில் தலா 6 சென்டிமீட்டர், கூடலூரில் 5.7 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
உதகை அருகே பாலக்கொலாவில் 5.3 செமீ, சேரங்கோடு 5.2 செமீ, தேவலாவில் 4.7 செமீ, குந்தாவில் 4.5 செமீ, எமரால்டில் 4செமீ மழையும் பதிவாகியுள்ளது.
கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!
Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!
கதை கேளு... கதை கேளு!
Malliga Selvaraj: அன்னை மடி!
தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!
Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!
தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!
தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்
மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்
{{comments.comment}}