சென்னை: பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்றிருந்த லட்சக்கணக்கான மக்கள், மொத்தமாக நேற்று இரவு கிளம்பி சென்னை திரும்பினர். இதனால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீபாவளி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை போன்ற மாநகரங்களில் தங்கி பணிபுரிவோர் மற்றும் கல்வி கற்போர் தங்களது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தைத்திருநாளாம் பொங்கல் திருநாள் கடந்த ஜனவரி 15ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கு மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணிப்பது வழக்கம். இந்த வருடம் பொங்கலுக்கு லம்ப்பாக ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்தது. இதையடுத்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

சொந்த வாகனங்களிலும், பேருந்து மற்றும் ரயில்களில் மக்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். விமான நிலையங்களிலும் கூட கூட்டம் அலை மோதியது. பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடித்த மக்கள், நேற்று இரவு கிளம்பி இன்று சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வரை சாலையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருந்தன. வாகனங்கள் ஊர்ந்து ஊர்ந்து செல்வதால் பள்ளி மற்றும் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். அதே போல ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து காவலர்கள் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில், ஊரப்பாக்கம், வண்டலூர், கிளாம்பாக்கம் பஸ் நிலையப் பகுதி, பெருங்களத்தூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில்தான் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் பேருந்து, ரயில் மற்றும் சொந்த வாகனங்களில் சென்றதினால், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டது. ரயில் நிலயங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் என்று இல்லாமல் சென்னை மற்றும் சென்னையை சுற்றிய அனைத்து சாலைகளிலும் காலையில் போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அலர்ட்!
பசி,பட்டினியை போக்கவில்லை... தீபம் ஏற்ற வேண்டும் என கூறுகிறார்கள்: சீமான் ஆவேசம்!
வானுயர் ஜிஎஸ்டிபி வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது:முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
மெஸ்ஸியை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஆவேசம்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மம்தா பானர்ஜி!
திமுக அரசின் துரோகத்திற்கு எதிராக தெருவுக்கு வந்த போராடும் அரசுஊழியர்கள்: அன்புமணி ராமதாஸ் வேதனை!
ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!
Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!
சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!
Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!
{{comments.comment}}