நடு ரோட்டில் நின்ற ஹெலிகாப்டர்.. திக்குமுக்காடிப் போன சிட்டிசன்கள்!

Sep 13, 2023,03:58 PM IST
பெங்களூரு: பெங்களூரு நகரின் போக்குவரத்து நெரிசல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நிலையில் அங்கு அன்றாடம் நடைபெறும் ஒரு நிகழ்வை வைத்து சிலர் போக்குவரத்து நெரிசலைக் கிண்டலடித்துள்ளனர்.

ஒவ்வொரு நகரமும் பெருநகரமாகும்போது நரக வேதனையைச் சந்திப்பது அந்த ஊரில் வசிக்கும் மக்கள்தான். வாகனப் போக்குவரத்து அதிகரித்து, ஜனத் தொகை அதிகரித்து, மக்கள் நெருக்கம் அதிகரித்து கடைசியில் எல்லாமே இடியாப்பச் சிக்கலாகி நிற்கும்.

ஒரு காலத்தில் ஓய்வூதியதாரர்களின் சொர்க்கம் என்று வர்ணிக்கப்பட்ட நகரம்தான் பெங்களூர். அதன் குளுகுளு சூழல், அமைதி, எங்கெங்கும் காணப்பட்ட தோட்டங்கள் என்று பார்க்கவே டு ரம்மியமாக இருக்கும் அந்தக் காலத்து பெங்களூரு. பருவமே புதிய பாடல் பாடு.. பாடலை ஒரு முறை போய்ப் பாருங்கள்.. கிட்டத்தட்ட அதே சூழலில்தான் அந்தக் காலத்து பெங்களூரை மக்கள் ரசித்து வந்தனர்.



ஆனால் இன்று கான்க்ரீட் காடாக மாறி மக்கள் பெருக்கத்தாலும்,வாகன நெரிசலாலும் பெங்களூர் நரகமாகி காட்சி தருகிறது. சாலையில் ஒரு வாகனத்துடன் இறங்கி விட்டால்.. நாம் போய்ச் சேருமிடத்திற்கு எப்போது போவோம் என்று யாருக்குமே உறுதியாகத் தெரியாது. அப்படி ஒரு போக்குவரத்து நெரிசல் பெங்களூரில்.

இந்த நிலையில் ஒரு புகைப்படம் டிவிட்டரில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் ஒரு ஹெலிகாப்டரை சாலை மார்க்கமாக கொண்டு சென்று கொண்டுள்ளனர். அது போவதற்காக போக்குவரத்து சற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.

ஆனால் என்ன மேட்டர் என்றால் இது இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் ஆகும். சோதனை வெள்ளோட்டத்துக்காக இது எடுத்துச் செல்லப்பட்டபோது எடுத்த படம்தான் இது. இதுபோன்ற காட்சிகள் இந்தப் பகுதியில் சகஜமானது.  இது அங்கு அடிக்கடி நடப்பதுதான் என்று பலரும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

சிலரோ, இந்தப் பகுதியில் உள்ளோருக்கு, போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி அலுவலகத்திற்கு லேட்டாகப் போக இது நல்ல சான்ஸ் என்று கலாய்த்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்