பல மணி நேர அமலாக்கத்துறை விசாரணை.. ஹேமந்த் சோரன் ராஜினாமா.. புதிய முதல்வர் சம்பாய் சோரன்!

Jan 31, 2024,09:36 PM IST

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக இருந்து வந்த ஹேமந்த் சோரன், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பல மணி நேர அமலாக்கத்துறை  விசாரணைக்குப் பின்னர் அவர் ராஜினாமா செய்துள்ளார். புதிய முதல்வராக ஹேமந்த்துக்கு மிகவும் நெருக்கமானவரான சம்பாய் சோரன் பதவியேற்கவுள்ளார்.


நில மோசடி வழக்கில் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹேமந்த் சோரன்  அலுவலகத்திலும் ஏற்கனவே சோதனை நடத்தி பல லட்சம் ரூபாய், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.




இந்த நிலையில் பலமுறை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பல மணி நேரம் நடந்து வந்த விசாரணைக்குப் பின்னர்  சற்று முன்பு ஆளுநர் மாளிகைக்கு ஹேமந்த் சோரன் அழைத்து வரப்பட்டார். அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகளும் உடன் வந்திருந்தனர். 


அங்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்த ஹேமந்த் சோரன் தனது ராஜினாமாக் கடிதத்தை அவரிடம் ஒப்படைத்தார்.  அவரது ராஜினாமாவை உடனடியாக ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து புதிய முதல்வராக சம்பாய் சோரனை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்துள்ளனர். இவர் ஹேமந்த் சோரனுக்கு மிகவும் நெருக்கமானவர், போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார், மூத்த தலைவரும் கூட. இவர்தான் அடுத்து ஜார்க்கண்ட் முதல்வராகிறார்.




புதிய ஆட்சியமைக்க சம்பாய் சோரன் உரிமை கோரியுள்ளார். தனக்கு ஆதரவாக உள்ள 47 எம்எல்ஏக்களின் பெயர்ப் பட்டியலையும் சம்பாய் சோரன், ஆளுநரிடம் வழங்கியுள்ளார். அவற்றைப் பரிசீலித்த பின்னர் அழைப்பதாக ஆளுநர் அவருக்குத் தெரிவித்துள்ளார்.


தற்போது ஹேமந்த் சோரன் தொடர்ந்து அமலாக்கத்துறை கஸ்டடியில் இருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வமாக இன்னும் எந்தத் தகவலும் வரவில்லை.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்