சொடக்கு தக்காளி சாப்பிட்டிருக்கீங்களா.. செம சத்து.. சூப்பர் ஹெல்த்தி.. டிரை பண்ணுங்க!

Sep 04, 2024,01:35 PM IST

சென்னை:   தக்காளி தெரியும்.. அது என்ன சொடக்கு தக்காளி.. அப்படின்னு உங்களில் சிலருக்குக் கேட்கத் தோணும்.. உங்க மன ஓட்டம் சரிதான்.. எதுக்கு எந்த சொடக்கு?.. கொடுக்கு மாதிரி தக்காளிக்கு முன்னாடி?!


இது ஒரு வகை தக்காளிச் செடியாகும். இந்த தக்காளியானது வழக்கமான தக்காளி போல வெளியே தெரியாது. மாறாக ஒரு பை போன்ற அமைப்புக்குள் இருக்கும். அந்த பையை அழுத்தினால் சொடக்கென்ற சத்தத்துடன் அது திறக்கும்.. உள்ளே கனி தெரியும். இதனால்தான் இதற்கு சொடக்கு தக்காளின்னு பேரு வந்துச்சு.


சாலையோரமாக, தெருவோரங்களில் வளரும் எண்ணற்ற செடிகளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. உதாரணத்திற்கு குப்பை மேனிச் செடி. அதுபோலத்தான் இந்த சொடக்குத் தக்காளிச் செடியும். இதுவும் தானாகவே வளரக் கூடிய தன்மை படைத்த அருமையான செடியாகும்.




இதை ஆங்கிலத்தில்  Cutleaf Ground Cherry என்று சொல்வார்கள். இதன் தாவரவியல் பெயர்  Physalis minima. சொலனேசி குடும்பத்தைச் சேர்ந்த இந்த செடியானது, களிமண் மற்றும் ஈரம் சார்ந்த மண்ணில் வளரும். தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இதை அதிகமாகப் பார்க்கலாம். இதன் விதைகள் காற்றில் பல்வேறு இடங்களுக்கும் பரவுவதால் இது எளிதாக நீர் பிடிப்பு அதிகம் உள்ள இடங்களில் தானாகவே வளர்கிறது. ரொம்ப சின்னச் செடிதான் இது. 


சரி இந்த சொடக்கு தக்காளியால் என்னென்ன பலன்கள் இருக்கு. நிறைய இருக்குங்க.. பெரிய பட்டியலே போடலாம். தலைவலி இருந்தால் அதற்கு இந்த சொடக்கு தக்காளி சாப்பிட்டு வந்தால் அதைப் போக்கி சரியாக்கும். அதேபோல உடல் அரிப்பால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்களுக்கும் கூட இது நிவாரணம் தரும்.


மலச் சிக்கல் உள்ளவர்களுக்கு இது அருமையான மருந்து. இதை தொடர்ந்து சிலநாட்கள் சாப்பிட்டு வந்தால் மலமிளக்கியாக செயல்பட்டு, மலப் போக்கை சீராக்க உதவும். மலம் கழிப்பதும் இலகுவாகும். உடலில் ஏதேனும் அழற்சி ஏற்பட்டால் சொடக்கு தக்காளி சாப்பிடடு வர அது குணமாகும்.


உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  வலுப்படுத்தி, நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகளையும் சிறப்பாக மாற்றி சீராக்க உதவுகிறது சொடக்கு தக்காளி. இதனால் உடலில் எளிதாக நோய்த் தாக்குதல் ஏற்படுவது குறையும்.


வயிற்றுப் பிரச்சினைகள் உள்ளோருக்கு குறிப்பாக அல்சர் போன்ற பிரச்சினைகள் உள்ளோருக்கு இது நல்ல மருந்தாகும். இதை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் புண் பிரச்சினைகள் குணமாகுமாம். அதேபோல கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினை உள்ளோருக்கும் இது நல்ல வரப் பிரசாதமாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கருத்தரிப்பு சுலபமாகும் என்று சொல்கிறார்கள்.




வைட்டமின் நிறைய உள்ள பழம் இது. குறிப்பாக வைட்டமின் சி, பி காம்ப்ளக்ஸ் நிறைய உள்ளது. ஆர்த்தரிட்டிஸ் போன்ற மூட்டு வலி பிரச்சினைக்கும் சொடக்குத் தக்காளி அருமருந்தாகும்.


கண் பார்வை பிரச்சினை இருந்தால் தொடர்ந்து சொடக்குத் தக்காளி சாப்பிட்டு வந்தால் அது சரியாகும். பார்வைத் திறன் அதிகரிக்கும். மங்கலான பார்வை உள்ளோருக்கும் அது சரியாகுமாம்.


இப்படி பல்வேறு வகையான மருத்துவ பலன்களைக் கொண்டுள்ள அருமையான செடிதான் இந்த சொடக்குத் தக்காளி. அதேசமயம், இதை முறையான மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது. அதேபோல அதிக அளவில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக அமிர்தம் சாப்பிட்டாலும் கூட அது நஞ்சாகத்தான் போகும். எனவே இதையும் கூட போதிய மருத்துவ ஆலோசனையுடன், தேவையான அளவு மட்டுமே சாப்பிடுவது நல்லது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

India at Paralympis 2024.. 29 பதக்கங்களுடன் அட்டகாசமாக நிறைவு செய்த தீரர்கள்.. சபாஷ் இந்தியா!

news

பதிவு செய்யப்பட்ட கட்சின்னா என்ன.. தமிழக வெற்றிக் கழகம் போல.. தமிழ்நாட்டில்.. எத்தனை கட்சி இருக்கு?

news

தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்.. விஜய் சொன்ன ஹேப்பி நியூஸ்!

news

மனசிலாயோ.. கோட் பட பாணியில் அதிரடி காட்டும் வேட்டையன்.. அது மலேசியா வாசுதேவன் குரலேதான்!

news

Welcome Baby Girl.. தீபிகா படுகோன் - ரன்வீர்.. தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை.. தாயும் சேயும் நலம்!

news

ஓவர் லீவு.. புதிய வரலாறு படைத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. மொத்தம் 532 நாட்கள்!

news

ரஷ்யா - உக்ரைன் இடையே போர் முடிவுக்கு வருகிறதா?.. தீவிரமாக களம் குதித்த இந்தியா.. திடீர் திருப்பம்!

news

செப்டம்பர் 08 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

news

துலாம் ராசிக்காரர்களே.. சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய காலம்

அதிகம் பார்க்கும் செய்திகள்