சென்னை: சினிமா என்பதே ஆணாதிக்கம் நிறைந்தது என்று பொதுவாக சொல்வார்கள்.. இங்கு ஹீரோக்களுக்குத்தான் முதல் மரியாதை.. ஹீரோயின்கள் வெறும் அலங்கார பொம்மைகள் போலத்தான். ஹீரோயின்களை மையமாக வைத்து வரும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
அந்தக் காலத்திலிருந்து இப்போது வரை அப்படித்தான். ஒரு படம் என்றால் ஹீரோதான் கொண்டாடப்படுவார்.. தியாகராஜ பாகவதர் காலத்திலிருந்து இன்றைய தனுஷ் படம் வரை இதுதான் எதார்த்தம். ஆனால் எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து, அதாவது ஹீரோயினை கதை நாயகியாக வைத்து நல்ல படங்கள் வருவதும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இதில் விசேஷம் என்னவென்றால் தற்போது ஹீரோயின்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிக அளவிலான படங்கள் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளன என்பதுதான். திரிஷா நடித்த ராங்கி, நயன்தாரா நடித்த கனெக்ட், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த டிரைவர் ஜமுனா, கோவை சரளா நடித்த செம்பி ஆகியவைதான் இந்தப் படங்கள்.

நான்கு படங்களுமே தியேட்டர்களில் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளனர். திரையிலகில் இப்படி ஹீரோயின்களை மையமாக வைத்து வெளியான படங்கள் அதிக அளவில் திரைக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி - ராகேஷ் திரையரங்களில் இந்த நான்கு படங்கள்தான் தற்போது ஓடிக் கொண்டுள்ளன. இதுதொடர்பாக தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்கள் வைரலாகி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கு: அடுத்தடுத்து சிக்கும் நபர்கள்... தீவிரமடையும் விசாரணை
பிரே பண்ணிட்டு சாப்பிடுவோமா?.. நீட்டிக்கப்பட்ட காலை உணவுத் திட்டம்.. தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
திமுக.,வுக்கும் ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கும் தொடர்பு இல்லை: முன்னாள் அமைச்சர் ரகுபதி
அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் "கை சுத்தமில்லை"...கோர்ட்டில் மு.க.ஸ்டாலின் பதில் மனு தாக்கல்
ஆசிய விளையாட்டு போட்டி 2026: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை
Short story by Joseph Samraj: செதுக்குமுத்து!
ஜப்பானுக்கு எதிரான டி20 போட்டி: 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி
சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மனு தள்ளுபடி
போலி நம்பர் பிளேட் காரில் பயணித்தாரா திருமாவளவன்? - இணையத்தில் வைரலாகும் சர்ச்சைச் வீடியோ
{{comments.comment}}