கள்ளக்குறிச்சியில்.. 60 பேரைக் காவு கொண்ட கள்ளச்சாராய வழக்கு.. சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவு

Nov 20, 2024,06:32 PM IST

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாயம் அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜூன் மாதம் கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 60க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 190 க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இச்சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடும்  விமர்சனங்கள் எழுந்தன. 




இந்த சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சியை சேர்ந்த கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜன், அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன் உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக தகவல் வெளியானது. மேலும் இந்த மெத்தனாலை சப்ளை செய்த பலரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 


இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி எதிர்க்கட்சிகளான பாஜக, பாமக, அதிமுக, தேமுதிக ஆகியவற்றின் சார்பில்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கை சிபிஐக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.


இதுதொடர்பான உத்தரவைப் பிறப்பித்து நீதிபதிகள் கூறுகையில்,  மாநில அரசு விசாரணை மேற்கொண்டால் உண்மை வெளிவராது. எனவே விசாரணை அமைப்பை மாற்ற வேண்டும். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வழக்கை சிபிஐ அல்லது என் ஐ ஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இதில் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது காவல்துறைக்கு தெரியாமல் நடந்தது என்பதை ஏற்க முடியாது. மாநில போலீசார் சம்பவத்தை கண்டும் காணாமல் இருந்துள்ளது தெரிகிறது. அதே நேரத்தில் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப்பெற்றது தவறு. சிபிசிஐடி விசாரணைகளில் பெறப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்