நடிகர் கார்த்தி நடித்த வா வாத்தியார் ரிலீஸூக்கு இடைக்காலத் தடை: உயர்நீதி மன்றம்

Dec 04, 2025,04:05 PM IST

சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம்.


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள வா வாத்தியார் திரைப்படம். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்த படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஷல்பா, மஞ்சுநாத், கருணாகரன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் வரும் டிசம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் ரீலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.




இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தொழிலதிபர் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் கடந்த 2014ம் ஆண்டு திவாலானவர் என அறிவித்தது. திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் இடம் இருந்து ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் 10 கோடியே 35 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அந்த தொகையை வட்டியுடன் சேர்த்து செலுத்த ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், மேலும் அவர் தயாரித்த வா வாத்தியார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கவும் உத்தரவிடக் கோரி சொத்தாட்சியர் தெரிவித்திருந்தார்.


இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்  வா வாத்தியார்' திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை

news

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்

news

Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!

news

புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து

news

மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்

news

திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

news

ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?

news

அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்