வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது

Dec 03, 2025,04:50 PM IST

- சுமதி சிவக்குமார்


சென்னை: கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படத்தின் ரிலீஸ் தேதியை, 3வது லிரிக்கல் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.


இயக்குனர் நளன் குமாரசாமி இயக்கத்தில், ஸ்டுடியோ ஸ்கிரின் சார்பில் கே.இ. ஞானவேல் தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ளது வா வாத்தியார் படம்.


இப்படம் முழுமையாக தயாராகி விட்டது. முதலில் டிசம்பர் 5 ந்தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படத்தின் புதிய தேதியை 3வது லிரிக்கல் வீடியோவுடன் அறிவித்துள்ளனர்.




அதன்படி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளான டிசம்பர் 12 ந்தேதி திரைக்கு வருகிறது  என படபிடிப்பு குழு அறிவித்துள்ளது. 


இந்தப் படத்தில், கார்த்தி எம்ஜிஆர் ரசிகராக நடித்துள்ளாராம். இது முழுக்க முழுக்க ஆக்ஷன் + காமெடி சார்ந்து எடுக்கப்பட்ட படமாக தெரிகிறது. 


அமேசான் பிரைம் வீடியோ இந்த படத்திற்கான ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்றுள்ளது. மேலும் இதன் சாட்டிலைட் உரிமையை ஜீ தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.


(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குடும்பங்களுக்கு வருமானத்தை ஈட்டி தரும் வீட்டுக்கூரை சூரிய மின்சக்தி திட்டம்

news

ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் மூச்சு திணறி பலி!

news

வருகிறார் வா வாத்தியார்.. ரீலீஸ் தேதி அறிவிப்பு.. 3வது லிரிக்கல் வீடியோவும் வெளியானது

news

முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமான சந்தித்து பேசினோம்: செல்வப்பெருந்தகை பேட்டி

news

இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி.. அனைத்து விலைகளும் உயரும் அபாயம்!

news

வின்டோஸ் அப்டேட் குழப்பத்தால்.. நாடு முழுவதும் பல விமானங்கள் ரத்து.. சேவைகளில் தாமதம்

news

அமெரிக்காவை அதிர வைக்கும் Bomb Cyclone.. பல ஊர்களை பனி மூடியது!

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுத்த வானிலை மையம்

news

ரூ. 93,000க்கு வாங்கிய காரின் விலை இன்று எவ்வளவு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்